நீங்கள் பிறந்த எண் இதுவா? உங்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்
ஜோதிடத்தில் எண் கணிதம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எண் கணிதம் கொண்டும் நாம் ஒருவருடைய வாழ்க்கையை தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் ஒருவர் பிறந்த எண் கொண்டு அவர் எப்படிப்பட்ட குணம் படைத்தவர் என்று பார்ப்போம்.
நம்முடைய எண் எது என்பதை தெரிந்து கொள்ள நாம் பிறந்த தேதி, மாதம் வருடம் இவை அனைத்தையும் கூட்டி வருகின்ற எண்ணையும் கூட்டினால் கிடைக்கின்ற எண் தான் நமக்கு எண்ணாகும்.
எண் 1:
இந்த எண்ணில் பிறந்த நபர் மிகவும் திறமைசாலியாக இருப்பார்கள். தனக்கென்று ஒரு வழியை வகுத்து அதன் வழி வாழ வேண்டும் என்று எண்ணுவார்கள். இவர்கள் ஒரு மிகச் சிறந்த தலைமை பண்பு கொண்டவர்கள்.
எண் 2 :
இந்த எண்ணில் பிறந்தவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். இவர்கள் பெரும்பாலும் சிக்கல்களையும் சண்டையையும் தவிர்த்து அமைதியான வாழ்க்கை வாழ விரும்புவார்கள்.
எண் 3 :
இந்த எண்ணில் பிறந்தவர்கள் மிகச் சிறந்த படைப்பாற்றல் கொண்டவர்கள். இருந்தாலும் இவர்களிடம் ஒரு நிலையற்ற தன்மையை காணலாம்.
எண் 4 :
இந்த எண்ணில் பிறந்தவர்கள் மிகவும் இயல்பான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். மேலும் இவர்களை சுற்றி உள்ள நபர்களை இவர்கள் ஊக்குவித்து தன் வசப்படுத்துவதில் இவர்கள் திறமைசாலிகள்.
எண் 5 :
இந்த எண்ணில் பிறந்தவர்கள் மிகவும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று எண்ணுவார்கள். இவர்களுக்கு தினமும் அலுவலகம் சென்று வேலை பார்ப்பது என்பது கூண்டுக்குள் அடைக்கப்படும் பறவையை போல் என்று எண்ணி சுதந்திரமாக தொழில் செய்து வாழக்கூடியவர்கள்.
எண் 6 :
இந்த எண்ணில் பிறந்தவர்கள் மிகவும் அன்பானவர்களாகவும் பொறுப்பான நபர்களாகவும் இருக்கக் கூடியவர்கள். சுற்றி உள்ளவர்களுக்கு எந்த தயக்கமும் இன்றி உதவி செய்வார்கள். சமயங்களில் இவர்கள் நல்லெண்ணத்தை தவறாக பிறர் பயன்படுத்தவும் கூடும்.
எண் 7 :
இந்த எண்ணில் பிறந்தவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் சரியாக ஆராய்ந்து செய்ய வேண்டும் என்று எண்ணுவார்கள். பிறருடைய தவறை எளிதாக கண்டுபிடித்து சுட்டிக்காட்டக் கூடியவர்கள்.
எண் 8 :
இந்த எண்ணில் பிறந்தவர்கள் தங்களுடைய குறிக்கோளில் மிக கவனமாக இருப்பார்கள். கடுமையாக உழைத்து முன்னேற கூடியவர்கள்.
எண் 9 :
இந்த எண்ணில் பிறந்தவர்கள் மிகவும் இரக்க குணம் கொண்டவர்கள். எந்த வேலையை செய்தாலும் தனக்கென்று ஒரு இடத்தை அவர்கள் நிரூபிக்க விரும்புவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







