உங்கள் ராசி படி நீங்கள் எந்த கர்மவினையில் பிறந்து இருக்கிறீர்கள் தெரியுமா?
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தனித்துவமான தன்மை இருக்கிறது. அந்த வகையில், உங்களுடைய ராசி படி நீங்கள் எந்த கர்ம வினையில் பிறந்து இருக்கிறீர்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
சஞ்சிதா கர்மா:
இவை முற்பிறவி கர்மவினை குறிக்கக் கூடியதாகும்.

பிராரப்த கர்மா:
இவை நாம் இப்பொழுது அனுபவிக்க கூடிய கர்மவினையை குறிக்கக் கூடியதாகும்.
ஆகாமிய கர்மா:
இவை நாம் இனி அனுபவிக்க போகக்கூடிய கர்மவினையை குறிக்க கூடியதாகும்.
சஞ்சித கர்மா:
கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசியலில் பிறந்தவர்கள் இந்த கர்ம வினையில் அடிப்படையில் பிறந்திருக்கிறார்கள். முற்பிறவியல் இவர்கள் செய்த நல்ல நன்மை தீமை அதற்கு ஏற்ப இவர்களுக்கு இந்த கர்மவினையாது திரும்ப வந்து சேர்கிறது.
பிராரப்த கர்மா:
ரிஷபம், கன்னி, மகரம் இவர்கள் முற்பாதியில் அதிர்ஷ்டத்தையும், பிற்பாதியில் கஷ்ட காலங்களிலும் இருந்து மீண்டு வந்து நல்ல வாழ்க்கை அமையும்,

ஆகாமிய கர்மா:
மேஷம், தனுசு, சிம்மம் முற்பாதியில் இவர்கள் எந்த அளவு நல்ல மனதுடன் இருக்கிறார்களோ அதை வைத்து பிற்பாடு இவர்களுக்கு கர்மா வந்து சேர்கிறது.
மூன்றும் சேர்ந்து கர்மா:
துலாம், மிதுனம், கும்பம் இவர்கள் மூவரும் வாழ்கின்ற வாழ்க்கை முழுவதும் இந்த மூன்று கர்மாவும் இவர்களுக்கு சுற்றி சுற்றி வரும். அதாவது நல்லது செய்தால் நல்லதும், கெட்டது செய்தால் கெட்டதும் வந்து சேர்கிறது, இவர்களுடைய குணத்தை வைத்து இவர்களுக்கு கர்மாவானது செயல்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |