நீங்கள் எப்படிப்பட்ட பக்தர்? கீதை சொல்வது என்ன?
உலகில் பிறந்த அனைவரும் ஒரே போல் இருப்பது இல்லை.அப்படியாக எண்ணம் செயல் இவை எல்லாம் வேறுபாடுகள் உடையது.
அதே போல் தான் எல்லா செயல்களில் மனிதர்கள் குணம் வேறுபாடுடையது.அப்படிதான் இறைவனின் வழிபாட்டில் வழிபாடுகளும் வேறுபடுகிறது.
அதை தான் கீதையில் பக்தர்கள் நான்கு வகை படுகின்றனர் என்று சொல்கிறது.அதை பற்றி பார்ப்போம்.
முதலாவது வகை பக்தர்கள் அர்த்தன் என்று அழைக்கப்படுகின்றனர். பொதுவாக பூமியில் இருக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கு எதோ ஒரு வகையில் துன்பம் நேர்ந்து கொண்டுதான் இருக்கும்.அதை பொறுத்துக்கொள்ளமுடியாமல் புரிந்து கொள்ளமுடியாமல் தான் படுகின்ற துன்பங்களிலிருந்து தன்னை விடுவித்துக் காப்பாற்றும்படி வேண்டிக்கொள்கின்ற பக்தி ஆகும்.
இரண்டாவது வகை பக்தி அர்த்தார்த்தி.சிலர் இறைவனிடம் தான் வேண்டும் பொருளை கேட்கும் பழக்கம் இருக்கிறது.அதாவது கடவுள் என்றாலே நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்பவர் என்று வேண்டுதலை வைப்பவர்கள். அதைத்தா! இதைத்தா! என்று ஏதாவது ஒரு தேவையைப் பெற இறைவனிடம் வேண்டிக்கொள்கின்ற பக்தி இது.
மூன்றாவது வகை ஜிக்ஞாசு. வாழ்க்கையையும் அதன் உண்மையான நோக்கத்தையும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத், தாம் வாழ்கின்ற விதத்தை மாற்றி ஒரு குருவை சென்று சேர்ந்து ஆன்மீக சாதகர்களாக ஞானத்தைத் தேடி அலைபவர்கள் இவ்வகை பக்தர்கள்.
நான்காவது வகை பக்தர்களாகத் திகழ்பவர்கள் ஞானியர். இவர்களுக்கு இறைவனைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை. நானும் இறைவனும் ஒன்று என ஐக்கிய பாவத்துடன் தன்னுள் அவனைத் தியானத்திருப்பவர்கள் இவர்கள்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |