பூஜை அறையில் ஏன் தண்ணீர் வைத்து வழிபாடு செய்யவேண்டும்?

By Sakthi Raj Aug 08, 2024 05:00 AM GMT
Report

நம் அனைவருடைய பூஜை அறையிலும் எப்பொழுதும் சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்திருப்பதுண்டு. அப்படியாக சிலருக்கு ஏன் தண்ணீர் வைத்து வழிபாடு செய்யவேண்டும் என்று தெரியாது.

சிலருக்கு தண்ணீர் வைக்கவேண்டுமா என்று கூட தெரியாது  ,இப்பொழுது நாம் ஏன் பூஜை அறையில் தண்ணீர் வைக்க வேண்டும். அதன் பலன் என்னவென்று பார்ப்போம்.

தினமும் நாம் பூஜை செய்யும் பொழுது நாம் சுவாமிக்கு பழங்கள் பலகாரங்கள் படைப்பதுண்டு.அத்துடன் நம்முடைய பூஜை அறை மண் பானையிலேயோ அல்லது செம்பு பாத்திரத்திலேயோ தண்ணீரை நிரப்பி வைப்பதும் உண்டு.

பூஜை அறையில் ஏன் தண்ணீர் வைத்து வழிபாடு செய்யவேண்டும்? | Why To Keep Water In Pooja Room

மேலும் ஒருவர் பூஜை செய்யும் பொழுது தியானத்தில் அமர்ந்து நமக்கு பிடித்த தெய்வத்தின் மூல மந்திரத்தை சொல்ல வேண்டும். அவ்வாறு செய்வதால் நீங்கள் சொல்லும் மந்திரத்தின் (நேர்மறை ஆற்றல்) அதிர்வலைகள் அந்த தண்ணீரில் இறங்கும்.

இவ்வாறு செய்து அந்த தண்ணீரை அருந்துவதால் நன்மைகள் உண்டாகும். பூஜையின்போது தீபாராதனை காண்பித்து முடிந்தால் தெய்வப்பாடல்களை நாம் பாடி  வழிபடலாம் இல்லை பாடல்கள் ஒலிக்க செய்து வழிபாடு செய்யலாம்.

மேலும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் இரும்புப் பொருள்களை பூஜைக்குப் பயன்படுத்தக்கூடாது. இரும்பு எமனுக்கு உரியது. இரும்பினால் நேர்மறை சக்திகளை கிரகிக்க முடியாது.

கேட்ட வரம் உடனே அருளும் ஆடிப்பூரம் ஆண்டாள் வழிபாடு

கேட்ட வரம் உடனே அருளும் ஆடிப்பூரம் ஆண்டாள் வழிபாடு


வெள்ளி, தாமிரம், ஈயம் பூசிய பித்தளை, மண்ணால் ஆன பூஜைப் பாத்திரங்களை மட்டும் பயன் படுத்த வேண்டும், ஒவ்வொரு நாள் பூஜையின்போதும் சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

அடுத்த நாள் அதைக் கூரையில் ஊற்றிவிட வேண்டும். இப்படிச் செய்வதால் துர்சக்திகள் நம் வீட்டை அண்டாது. பூஜையின்போது மணியோசை எழுப்புவதும் கூட துர்சக்திகள் நெருங்காமல் இருப்பதற்குத்தான்.

மணியின் இனிய ஓசையானது தீய சக்திகளை விரட்டி, தெய்விக சக்தியை வீட்டில் நிலவச் செய்யும் வல்லமை கொண்டது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US