ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுகிழமை மறக்காமல் நாம் வீட்டில் செய்யவேண்டியவை
ஆடி மாதம் மிகவும் சிறப்பான மாதம்.அந்த மாதம் முழுவதும் இறை வழிபாட்டிற்கு உரிய மாதம் ஆகும்.பெரும்பாலும் ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு மிக சிறப்பாக நடக்கும்.
அம்மனுக்கு கூழ் படைத்தல் போன்ற விஷயங்கள் எல்லாம் வெகு சிறப்பாக நடக்கும்.அப்படியாக ஆடி மாதம் இறை வழிபாட்டை வேண்டுதலை தவற விட்டவர்கள் அனைவரும் இந்த ஆடி கடைசி ஞாயிற்று கிழமை அவர்கள் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
அதாவது நாளை ஆடி மாதம் அம்மன் வழிபாட்டோடு சேர்த்து கன்னி தெய்வங்களுடைய வழிபாட்டை மேற்கொண்டால் வீட்டில் தடை பட்டு இருந் சுப காரியங்கள் எல்லாம் நடந்தேறும்.
இந்த வழிபாட்டை மேற்கொள்ள நம் வீடுகளில் நம் கைகளால் கூழ் காய்ச்ச வேண்டும். காய்ச்சிய கூழில் குளிர்ந்த தயிர், சின்ன வெங்காயம் எல்லாம் சேர்த்து அந்த கூழ் பானைக்கு வேப்பிலை கட்டி வீட்டில் இருக்கும் மாரியம்மன் திருவுருவப்படத்திற்கு முன்பாக வைத்து வழிபாடு செய்யவேண்டும்.
முடிந்தால் வீட்டிற்கு அருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு சென்று கூழ் வைத்து அம்பாளை வழிபட்டு வரலாம்.
மேலும் இந்த மாதம் பசியோடு இருப்பவர்களுக்கு கூழ் தானம் செய்தால் உங்களுடைய குடும்பம் மேம்படும்.
மேலும் வீட்டில் பல தலைமுறைக்கும் பஞ்சம் ஏற்படாது. மேலும் குடும்பத்தில் கன்னி தெய்வ வழிபாடு இல்லை என்றால் அவர்கள் திரிபுர சுந்தரியை நினைத்து வழிபாடு செய்ய அவர்கள் குடும்பத்தில் சந்தோசம் பிறக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |