வீடுகளில் விளக்கேற்றிய பழைய திரிகளை தூக்கி போடாமல் இப்படி செய்யுங்கள்
விளக்கேற்றுவது நம்முடைய கலாச்சாரத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
நாம் அனைவரும் விளக்கேற்றிய பிறகு வாரத்திற்கு ஒரு முறையாவது விளக்கினை சுத்தம் செய்வோம்.
அப்படி சுத்தம் செய்யும் போது விளக்கேற்ற பயன்படுத்திய திரியை என்ன செய்ய வேண்டும் என்பது பலருக்கும் தெரியாது.
பெரும்பாலானவர்கள் விளக்கை சுத்தம் செய்யும் போது மட்டுமே பழைய திரிகளை மாற்றி விட்டு, புதிய திரியை மாற்றுவார்கள்.
இந்நிலையில், அவ்வப்போது உபயோகித்த திரிகளை ஒரு சிறிய பாத்திரத்தில் சேர்த்து வைக்க வேண்டும்.
கொஞ்சம் திரிகள் சேர்ந்ததும் வீட்டில் இருக்கும் அனைவரையும் கிழக்கு முகமாகப் பார்த்து உட்கார வைத்து இந்த திரிகளை பயன்படுத்தி திருஷ்டி சுத்த வேண்டும்.
இரவு சாப்பிட்டு முடித்த பிறகு தூங்கச் செல்வதற்கு முன்பாக, திரிகளை தூபக் காலில் போட்டு, அப்படியே அனைவரையும் சேர்த்து வலமிருந்து இடமாக மூன்று முறையும், இடமிருந்து வலமாக மூன்று முறையும் திருஷ்டி கழிக்க வேண்டும்.
திருஷ்டி கழித்து முடிந்ததும் வீட்டு வாசலில் வைத்து அதனைக் கொளுத்தி விடுங்கள்.
திரிகள் கருகி கரியாகி முடிந்ததும் அதனை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். திரிகள் முழுக்க எரிந்து முடிந்ததும், வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் இந்த நெருப்பில் எரிந்து சாம்பலாகி விடும்.
மேலும், உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்கள் அழிந்து நன்மை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |