கோவிலில் கொடுக்கும் மாலை மற்றும் பிரசாதங்களை என்ன செய்யவேண்டும் தெரியுமா?

By Sakthi Raj May 20, 2026 04:32 AM GMT
Report

நாம் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யும் பொழுது அங்கு நமக்கு பூஜை செய்த பூமாலை, எலுமிச்சை பழம் பிரசாதம் என சில பொருட்களை நாம் பிரசாதமாக பெறுவது உண்டு. பலருக்கும் வாங்கிய பிரசாதத்தை என்ன செய்ய வேண்டும் என்று தெரிவதில்லை.

அதாவது ஒரு சிலர் கோவிலில் கொடுக்கக்கூடிய மாலைகளை காரின் முன்புறம் மாட்டி விடுகிறார்கள். அப்படியாக, கோவிலில் கொடுக்கக்கூடிய பிரசாதங்களை மாலைகளை நம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி முழுமையாக பார்க்கலாம்.

கோவிலில் கொடுக்கும் மாலை மற்றும் பிரசாதங்களை என்ன செய்யவேண்டும் தெரியுமா? | What Should We Do With Temple Prasad And Garlands

27 நட்சத்திரத்திற்கு உரிய அதிர்ஷ்ட நிறம் மற்றும் மலர் என்ன தெரியுமா ?

27 நட்சத்திரத்திற்கு உரிய அதிர்ஷ்ட நிறம் மற்றும் மலர் என்ன தெரியுமா ?

1. கோவிலில் கொடுக்கக்கூடிய பூக்களை நாம் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் பகிர்ந்து கொள்வது நமக்கு நல்ல புண்ணியத்தை கொடுக்கிறாது. பூமாலையாக இருந்தால் அந்த மாலையை நம் வீட்டில் நிலை வாசலில் மாட்டி விடலாம் அல்லது வீட்டில் பூஜை அறையில் வைத்து விட்டு பிறகு அந்த மாலை காய்ந்தவுடன் அதை நாம் நீர் நிலைகளில் கரைத்து விட வேண்டும்.

2. அதேபோல் பூமாலைகள் வீட்டில் கொண்டு வந்து வைப்பதும் நிலை வாசலில் கட்டுவதும் பலரும் கடைப்பிடிக்கக்கூடிய ஒரு செயல் தான். அதேபோல் எலுமிச்சம் பழம் மாலை கொடுக்கிறார்கள் என்றால் அதை என்ன செய்ய வேண்டும் என்கின்ற குழப்பம் இருக்கும்.

எலுமிச்சைப்பழம் வீட்டின் பூஜை அறையில் நாம் மாட்டி வைக்கலாம். பூஜை அறை கதவில் நாம் கட்டி வைக்கலாம். பிறகு யார் கால்களிலும் மிதி படாதவாறு அதை அகற்றி விட வேண்டும்.

கோவிலில் கொடுக்கும் மாலை மற்றும் பிரசாதங்களை என்ன செய்யவேண்டும் தெரியுமா? | What Should We Do With Temple Prasad And Garlands

2026: குரு பகவானால் உச்சத்திற்கு செல்லப்போகும் அந்த 3 ராசிகள் யார் ?

2026: குரு பகவானால் உச்சத்திற்கு செல்லப்போகும் அந்த 3 ராசிகள் யார் ?

3. கோவிலில் சாப்பிடுவதற்காக கொடுக்கக்கூடிய பிரசாதங்களை நம் வீட்டுக்கு எடுத்து வந்த பிறகு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்வது என்பது நமக்கு மிகச்சிறந்த புண்ணியத்தை சேர்க்கக்கூடியது.

ஒருவேளை கிலோ கணக்கில் உங்களுக்கு புளியோதரை, சர்க்கரை பொங்கல், சுண்டல் போன்றவை பிரசாதமாக வந்தால் நிச்சயமாக அவற்றை நாம் மற்றவர்களுக்கு பகிர்ந்து சாப்பிடும் பொழுது இறைவன் மனம் நிறைவடைந்து நமக்கு ஆசிர்வாதத்தை வழங்குகிறார்.

4. பலருக்கும் கோவிலில் நமக்காக பூஜை செய்து கொடுக்கப்பட்ட பிரசாதங்களை மற்றவர்களுக்கு கொடுப்பதினால் நம்முடைய நம்முடைய ஆசீர்வாதம் மற்றவர்களுக்கு சென்று அடையாத என்கின்ற ஒரு குழப்பம் ஏற்படும்.

நிச்சயம் இல்லை. எந்த ஒரு விஷயத்தையும் நாம் பகிர்ந்து கொள்ளக்கூடிய மனப்பான்மை வந்துவிட்டால் அந்த இடத்தில் இறைவனுடைய முழு ஆசிர்வாதம் நீங்காமல் நமக்கு கிடைக்கிறது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US