மகாளய பட்சம் காலத்தில் வரும் ஒவ்வொரு தித்திக்கும் தனி சிறப்பு உண்டு.. என்ன தெரியுமா
2026 ஆம் ஆண்டிற்கான மகாளய பட்சம் செப்டம்பர் 26 சனிக்கிழமை அன்று தொடங்கி அக்டோபர் 10 சனிக்கிழமை அன்று நிறைவடைகிறது. பொதுவாக, மகாளய பட்ச காலத்தில் வரக்கூடிய ஒவ்வொரு திதிக்குமே ஒரு தனி சிறப்பு இருப்பது உண்டு.
மேலும், இந்த 15 நாட்கள் நாம் செய்யக்கூடிய வழிபாடு நம்முடைய முன்னோர்களுக்கு ஒரு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும் என்பதும் நம்பிக்கை.

முக்கிய தேதிகள்:
ஆரம்ப நாள் (பௌர்ணமி ஷ்ராத்தம்): செப்டம்பர் 26, 2026 (சனி) மகா பரணி திதி: இந்த 15 நாட்களில் வரும் பரணி நட்சத்திரம் மிகவும் சக்திவாய்ந்தது. நிறைவு நாள் (மகாளய அமாவாசை / சர்வபித்ரு அமாவாசை): அக்டோபர் 10, 2026 (சனி) இந்த மகாளய பட்சத்தில் சிறப்பு என்னவென்றால் நம்முடைய முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் மற்றும் அன்னதானம் செய்வதற்கு மிக உகந்த காலமாகும்.
மேலும், மறைந்த முன்னோர்கள் இந்த காலத்தில் நம்முடைய வீட்டிற்கு வருகை தருவதாக ஐதீகம். அதுமட்டுமல்லாமல் இறந்தவர்களுடைய திதி தெரியாதவர்களும் மற்றும் மறைந்தவர்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்த இந்த மகாளய அமாவாசை மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது.
மகாளய பட்சத்தின் அரிய சிறப்புகள் முன்னோர்களின் வருகை:
இந்த 15 நாட்களுமே எமதர்மராஜா பித்துரு லோகத்தில் இருக்கக்கூடிய ஆன்மாக்களை பூலோகத்திற்கு சென்று அவர்களுடைய சந்ததியினரை சந்தித்து அவர்கள் தரும் வழிபாட்டை ஏற்பதற்கு அனுமதி கொடுப்பதாக ஐதீகம்.

யார் யாருக்குத் தர்ப்பணம் கொடுக்கலாம்?
வழக்கமான அமாவாசைகளில் தந்தை வழி முன்னோர்களுக்கு மட்டுமே நாம் தர்ப்பணம் கொடுப்பதுண்டு. ஆனால், மகாளய பட்ச காலங்களில் நாம் தாய் வழி முன்னோர்கள் மற்றும் குருமார்கள் நண்பர்கள் மற்றும் விபத்துகளில் அல்லது வாரிசுகள் இல்லாமல் இறந்தவர்கள் என்று நமக்குத் தெரிந்த நபர்கள் இறந்திருந்தால் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுக்கலாம்.
நம்முடைய நன்றி உணர்வை கட்டாயம் அந்த நாளில் வெளிப்படுத்தலாம். இது வெறும் சடங்காக மட்டுமல்லாமல் நம்முடைய வாழ்க்கைக்கு ஒரு அடித்தளம் போட்டு கொடுத்த நம்முடைய முன்னோர்களுக்கு செலுத்தக்கூடிய ஒரு மிகப்பெரிய நன்றி கடன் ஆகும்.
என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது:
இந்த மகாளய பட்சம் 15 நாட்களும் தினமும் தண்ணீர் கொண்டு தர்ப்பணம் கொடுத்தல் ஏழை எளியவர்களுக்கு மற்றும் விலங்குகளுக்கு முக்கியமாக காகத்திற்கு உணவு வழங்குதல் போன்றவை நிச்சியமாக செய்யலாம். ஆனால், இந்த 15 நாட்களும் எந்த ஒரு சுபகாரிய நிகழ்ச்சிகள் அதாவது திருமணம் காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |