ஹோலி பண்டிகை அன்று என்ன செய்யலாம்?என்ன செய்யக்கூடாது?
ஹோலி பண்டிகை என்பது மிகவும் முக்கியமான பண்டிகை ஆகும். அதாவது ஹோலி என்பது நம்முடைய ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் பாரம்பரியத்தை குறிக்கிறது. இவ்வளவு விஷேசமான நாளில் நாம் என்ன விஷயங்கள் செய்யலாம்?என்ன செய்யக்கூடாது என்று பார்ப்போம்.
இந்த ஆண்டு, ஹோலிகா தகனம் மார்ச் 13ஆம் தேதியும், துலாந்தி மார்ச் 14 ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது. ஹோலிகா தகன நாளில், பக்தர்கள் விஷ்ணுவை வழிபாடு செய்வார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த நாளில் நாம் பிறருக்கு கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
அவ்வாறு செய்யும் பொழுது நம்முடைய நிதி இழப்புகள் உண்டாகும். அதே போல் கர்ப்பிணி பெண்கள் கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும். காரணம் கர்ப்பிணிப் பெண்கள் ஹோலிகா நெருப்பைச் சுற்றி வருவது கடுமையான பாதிப்பை கொடுக்கும்.
இருந்தாலும்,பூஜையில் மற்றும் பிற விழாக்களில் பங்கேற்கலாம். ஹோலி பண்டிகையில் நாம் ஒரு பொழுதும் பிறரை அவமதிக்க கூடாது. பிறர் மனம் புண் படும் வகையில் பேச கூடாது. அன்பு மற்றும் கருணையோடு பிறரிடம் பழகுவது நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
ஹோலிகா தகன பூஜையின்போது சுத்தமான மற்றும் புதிய ஆடைகளை அணிவது செல்வ செழிப்பை கொடுக்கும். மேலும்,இவ்வளவு அற்புதமான நாளில் இறைச்சி மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.இவை எல்லாம் தவிர்த்து விஷ்ணு வழிபாடு செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |