2026: ஹோலி பண்டிகை எப்பொழுது? அன்று என்ன செய்ய வேண்டும்?
இந்து மதத்தில் எல்லோரும் விரும்பி கொண்டாடக்கூடிய பண்டிகையாக ஹோலி பண்டிகை உள்ளது. ஹோலி பண்டிகை என்றாலே நம் நினைவிற்கு வருவது வண்ணங்கள் தான். இந்த பண்டிகை நம்முடைய இசை, ஒற்றுமை, மகிழ்ச்சி எல்லாவற்றையும் போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது.
அதாவது வசந்த காலத்தை போற்றும் விதமாக மாசி மாத பௌர்ணமி அன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும், ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்கு பல காரணங்கள் புராணங்களிலும் சொல்லப்படுகிறது.
அதாவது தீமைகளை அழித்த கிருஷ்ண பகவானின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும் கிருஷ்ணர் ராதையின் தெய்வீக அன்பை போற்றும் வகையில் கொண்டாடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது என்று சொல்கிறார்கள்.

அதாவது பிரகலாதனை கொல்லுவதற்காக இரண்யகசிப்பு ஹோலிகா என்ற பெண்ணை அனுப்பினார். பிறகு ஸ்ரீ கிருஷ்ண பகவானின் அருளால் ஹோலிகா தீயில் எரிந்து சாம்பலானது ஹோலிகா தகன் என்றும் பிரகலாதன் காப்பாற்றப்பட்டதை கொண்டாடப்படுவதற்காகவும் ஹோலி பண்டிகை இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும், பகவான் கிருஷ்ணர் கருமை நிறம் கொண்டவர். இதனால் கருமை நிறமான தன்னை எப்படி ராதா ஏற்றுக்கொள்வார் என்று எண்ணிய கிருஷ்ண பகவான் அதைப் பற்றி தன்னுடைய தாய் யசோதனிடம் முறையிடுகிறார்.

கிருஷ்ண பகவானின் கவலையை போக்க வண்ண வண்ண பொடிகளை ராதையின் மீது தூவி விட பிறகு உனக்கும் ராதிகா தோலின் நிறத்தில் எந்த வேற்றுமையும் ஏற்படாது என யசோதை கிருஷ்ண பகவானுக்கு ஆலோசனை சொல்கிறார்.
அதன்படி வண்ண வண்ண பொடிகளை ராதை மீது தூவிய கிருஷ்ண பகவான் விளையாடி மகிழ்ந்ததாகவும் வேற்றுமைகளை மறந்து கொண்டாடியதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் தான் ஹோலி பண்டிகை அன்று நம் மனதில் வேற்றுமை அகல ஒருவர் மீது ஒருவர் வண்ண வண்ண பொடிகளை தூவி கொண்டாடுவதாக புராணங்கள் சொல்லப்படுகிறது.

மேலும் குளிர்காலம் முடிந்து வசந்த காலம் துவங்குவதை குறிக்கும் வகையிலும் இந்த ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனால் தான் ஹோலி கொண்டாட்டத்தின் பொழுது மஞ்சள் நிறம் அதிக அளவில் காணப்படுகிறது.
இந்த ஆண்டு பௌர்ணமி மார்ச் 2ஆம் தேதி மாலை 6. 29 மணிக்கு துவங்கி மார்ச் மூன்றாம் தேதி மாலை 5:52 மணி வரை இருக்கிறது. இதனால் ஹோலி பண்டிகை மார்ச் இரண்டாம் தேதியா அல்லது மூன்றாம் தேதியா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது.
பௌர்ணமி திதி இருக்கும் நேரத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட வேண்டும் என சொல்லப்படுவதால் மார்ச் இரண்டாம் தேதி மாலை 6:29 மணிக்கு துவங்கி மார்ச் மூன்றாம் தேதியன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சிலர் பௌர்ணமி திதி துவங்கியதில் இருந்து ஹோலி பண்டிகை கொண்டாடுவதாக வழக்கம் வைத்திருக்கிறார்கள். ஆதலால் மார்ச் 2ஆம் தேதி அன்று மாலை துவங்கி மார்ச் 3ஆம் தேதி அன்று மாலை வரை ஹோலி பண்டிகை நாம் கொண்டாடலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |