கடவுள் எங்கே இருக்கிறார்?
மக்கள் கடவுளை சிலை வடிவில் பார்த்தாலே விடுவதில்லை.தனுக்கு அது வேண்டும்.இது வேண்டும்.இந்த கோரிக்கை அந்த கோரிக்கை என்று கடவுளிடம் பெரிய ஒப்பந்தம் பேசுவார்கள்.
அப்படியாக பூமியில் சிலகாலம் தங்கியிருந்தார் கடவுள்.மக்கள் சும்மா விடுவார்களா?கடவுளிடம் சென்று இறைவா 'எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டே இருந்தனர்.கடவுளாகவே இருந்தாலும்,பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு அல்லவா?
கடவுளோ மக்கள் கொடுக்கும் இடஞ்சல்களுக்கு சலித்து போனார்.அவரும் மக்களிடம் இருந்து தப்பிக்க எத்தனையோ இடம் மாறினார். மக்கள் வேண்டுதல்கள் துறத்தல்கள் விடவில்லை.. கடைசியாக ஒரு முடிவு செய்தார்.
மனிதர்கள் கண்டுபிடிக்க முடியாதஇடத்திற்கு செல்ல வேண்டும் என்று.உடனே தேவர்களிடம் அழைத்து கருத்து கேட்டார்.அவர்களோ கடவுளிடம் "இமயமலைக்கு சென்று விடுங்கள் என்றனர்.
அதற்கும் சிலர் "அங்கும் மனிதர்கள் எளிதாக வந்து விடுவாரகளே" ஆதலால் "நிலாவுக்கு செல்லுங்கள்" என்றனர்.
இந்த மனிதர்கள் அங்கேயும் எப்படியாவது வழி கண்டுபிடித்து நிலாவிற்கும் வந்து விடுவார்கள். குழப்பமான கடவுள் இதற்கு ஒரு நிரந்தரத்தீர்வு வேண்டும்" என்று கடைசியாக ஞானி ஒருவரை சந்திக்கிறார்.
அவர் ஒரு யோசனை தெரிவிக்க கடவுளின் முகம் மலர்ந்தது. ஞானி சொல்கிறார் கடவுளே "யாரும் கண்டுபிடிக்க முடியாதஒரே இடம் மனிதர்களின் மனம் மட்டுமே"
அதற்குள் தங்கி கொண்டால் யாராலும் உங்களுக்கு தொல்லை இருக்காது. என்பது தான் அது. "கடவுளை வெளியுலகில் மனிதன் தேட, கடவுளோ நெஞ்சினில் குடியிருக்கிறார்".
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |