உங்கள் ஜாதகத்தில் கேது எந்த இடத்தில் இருக்கிறாரோ.. அதுதான் உங்கள் வாழ்க்கை பாடமாகும்
ஜோதிடத்தில் நிழல் கிரகமாக இருக்க கூடிய ராகு கேது மிக முக்கிய பங்கு பெறுகிறார்கள். அந்த வகையில் கேது பகவான் இந்த இடத்தில் அமர்ந்து இருக்கிறாரோ அதுதான் அந்த ஜாதகருடைய வாழ்க்கை பாடமாக அமைகிறது. அப்படியாக, கேது பகவான் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறார்? அதற்குரிய பலன் என்னவென்று பார்ப்போம்.

ஒன்றாம் இடத்தில் கேது இருந்தால் நான் ஏன் பிறந்தேன் என்கின்ற அளவிற்கு வாழ்க்கையை பற்றி புலம்ப வைத்து பாடம் கற்றுக் கொடுப்பார்.
இரண்டாம் இடத்தில் கேது இருந்தால் குடும்பத்தில் குழப்பம் பணக்கஷ்டம் எல்லாவற்றையும் கொடுத்து வெறுக்க செய்வார்.
மூன்றாம் இடத்தில் கேது இருந்தால் ஜாதகரை தைரியம் இல்லாதவராக செய்து செயல்பட வைப்பார்.
நான்காம் வீட்டில் கேது இருந்தால் வீடு வாகனத்தை விற்கும் நிலைக்கு தள்ளி வாழ்க்கை புரிய வைப்பார்.
ஐந்தாம் இடத்தில் கேது இருந்தால் பெற்ற பிள்ளைகளை அவர்களுக்கு துயரத்தை வழங்குபவராக இருப்பார்கள்.
ஆறாம் இடத்தில் கேது இருந்தால் கடன், நோய், அசிங்கம், அவமானம் ஆகியவற்றை கொடுத்து பாடம் கொடுப்பார்.
ஏழாம் இடத்தில் கேது இருந்தால் மனைவியை பிரிந்து சென்று பிறகு மனைவியின் உடைய அருமையை புரிய வைப்பார்.

எட்டில் கேது இருந்தால் வம்பு வழக்கு கேவலம் போன்றவற்றை ஏற்படுத்துவார்.
ஒன்பதில் கேது இருந்தால் இவர்களுக்கு உரிய பாக்கியங்கள் எல்லாம் வீணாகும். வாழ்க்கையில் அதன் வழியாக ஒரு பிடிப்பை பெறுவார்.
பத்தாமிடத்தில் கேது இருந்தால் தொழில் ரீதியாக நஷ்டம் கொடுத்து அதன் வழியாக வாழ்க்கையை புரிய வைப்பார்.
பதினோராம் இடத்தில் கேது இருந்தால் தோல்வியை பரிசாக கொடுத்து எல்லாவற்றிலும் நஷ்டத்தை ஏற்படுத்தி வாழ்க்கையை கற்றுக் கொடுப்பார்.
12ஆம் இடத்தில் கேது இருந்தால் அயன சயன போகும் அனைத்தையும் கெடுப்பார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |