ஜோதிட ரீதியாக உங்களுக்கு எந்த தசாபுத்தி பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும்?

By Sakthi Raj Aug 23, 2026 02:00 PM GMT
Report

ஜோதிட ரீதியாக ஒரு கிரகங்களோடு இன்னொரு கிரகங்கள் அல்லது இரண்டு மூன்று கிரகங்கள் ஒரே வீட்டில் அமர்ந்திருப்பதை நாம் பார்க்கலாம். அந்த வகையில், ஒரு கிரகங்களோடு இன்னொரு கிரகம் இணைந்து இருக்கும் பொழுது அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் என்னவென்று பார்ப்போம்.

ஒருவர் ஜாதகத்தில் சூரியனும் புதனும் இணைந்து இருக்கின்ற பொழுது அவர்களுக்கு புதன் திசையில் நிறைய நன்மைகள் கிடைக்கும். ஆனால், சூரிய திசையில் அவர்கள் அவ்வளவு நன்மைகளை பெற மாட்டார்கள்.

2026 செப்டம்பர் மாத பலன்: தொட்ட காரியங்களில் வெற்றியை பெறப்போகும் துலாம் ராசியினர்

2026 செப்டம்பர் மாத பலன்: தொட்ட காரியங்களில் வெற்றியை பெறப்போகும் துலாம் ராசியினர்

அதுபோல், செவ்வாயும் சந்திரனும் இணைந்து இருக்கின்ற பொழுது அல்லது ஒருவரை ஒருவர் பார்த்து இருந்தாலும் இவர்களுக்கு சந்திர திசையில் அளவற்ற நன்மைகள் கிடைக்கும். ஆனால், செவ்வாய் திசையில் இவர்கள் சாதாரண பலன்களை பெறுவார்கள்.

ஜோதிட ரீதியாக உங்களுக்கு எந்த தசாபுத்தி பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும்? | Which Dasha Bhukti Brings Success In Astrology

லக்னத்தில் கேது இருப்பவர்கள் மிகுந்த புத்திசாலியாகவும் அதிர்ஷ்டமாகவும் இருப்பார்களாம்

லக்னத்தில் கேது இருப்பவர்கள் மிகுந்த புத்திசாலியாகவும் அதிர்ஷ்டமாகவும் இருப்பார்களாம்

அதைப்போல், இவர்கள் குருவும் சனியும் சேர்க்கை பெற்றிருக்கின்ற பொழுது அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் பொழுது இவர்களுக்கு சனி திசையில் அதிகமான நற்பலன்களை கொடுக்கிறது.

ஆனால், குரு திசை இவர்களுக்கு சாதாரண பலனை கொடுக்கும். அதேபோல், குருவும் செவ்வாயும் சேர்க்கை பெற்று இருக்கும் பொழுது அல்லது ஒருவர் பார்த்துக் கொள்ளும் பொழுது இவர்களுக்கு செவ்வாய் திசை அதிகமான நற்பலன்களை கொடுக்கும். ஆனால் குரு திசை சாதாரண பலன்களை கொடுக்கிறது. 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US