ஜாதகத்தில் இந்த தசாபுத்தி நடப்பவர்களுக்கு கட்டாயம் கோடீஸ்வர யோகம் கிடைக்குமாம்
ஜோதிடம் என்பது பல வகையான விஷயங்களைக் கொண்டு எதிர்காலத்தை கணித்து சொல்லக் கூடிய ஒரு அம்சமாக இருக்கிறது. என்னதான் நம்முடைய 12 கட்டங்களில் ஒன்பது கிரகங்கள் இருந்தாலும் ஒவ்வொருவர் பிறந்த நேரம் ராசி நட்சத்திரத்திற்கு ஏற்ப நடக்கக்கூடிய தசாபுத்திகள் தான் அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்கிறது.
அதாவது ஒரு தசா புத்தி நடக்கின்ற வேளையில் தான் ஒருவருக்கு படிப்பு, தொழில், திருமணம் என்ற ஒரு உயரத்தையும் சில துன்பத்தையும் கொடுக்கக்கூடிய ஒரு நிலையை தருகிறது. அந்த வகையில் எந்த தசா புத்திகள் என்னென்ன பலன்களை கொடுக்கக் கூடியது என்பதை பற்றி பார்ப்போம்.

1.சூரிய திசை:
இந்த திசையின் பொழுது தான் ஒருவருக்கு பதவியில் உயர்வு, சமுதாயத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைதல், தந்தைக்கு மிக உயர்ந்த நிலைக்குச் செல்லுதல் போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். அதுவே அசுப பலன்கள் என்று எடுத்துக் கொண்டால் சிலருக்கு பதவி இழப்புகளுடன் மாற்றங்கள் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் மாரடைப்பு அல்லது தந்தையின் உடைய மரணம் அரசாங்க ரீதியாக பிரச்சனையை சந்திக்க கூடும்.
2. சந்திர திசை:
இந்த திசையின் பொழுது ஒருவருக்கு வருவாய் அதிக அளவில் அதிகரிக்கக்கூடும். வாகனம் யோகம் கிடைக்கும். காதல் மற்றும் படிப்பில் நிறைய ஆர்வங்கள், புத்திக்கூர்மை, தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சி கிடைக்கும். அதுவே அசுப பலன்கள் என்று எடுத்துக் கொண்டால் தாய்க்கு சில தீமைகள் நடக்கலாம். உணவு ரீதியாக சில கஷ்டங்கள் வரலாம். பொருளாதார இழப்புகள் காதல் தோல்வி போன்ற நிலையை இந்த திசையானது கொடுக்கக் கூடும்.
3. செவ்வாய் திசை:
இந்த திசையின் பொழுது ஆரோக்கியத்தில் சிறந்து விளங்குவார்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதிகாரமான பதவிக்கு செல்வார்கள். சகோதர சகோதரிகளுக்கு நல்ல யோகம் உண்டாகும். அசுப பலன்கள் என்றால் ஒரு சிலருக்கு திடீர் விபத்துக்கள் நேரலாம். காயம் அல்லது ரத்த அழுத்தம் உருவாகலாம். சிலருக்கு விவாகரத்து போன்ற விஷயங்கள் சந்திக்க கூடும்.
4. புதன் திசை:
இந்த திசையின் பொழுது ஒருவருக்கு கல்வி, ஞானம், வியாபாரத்தில் வெற்றி கொடுக்கல் வாங்கலில் ஒரு மிகச்சிறந்த லாபம் உறவினர்களிடையே நல்ல மகிழ்ச்சி போன்றவை உண்டாகும். அதுவே அசுப பலன்கள் என்று எடுத்துக் கொண்டால் நரம்பியல் சம்பந்தமான வியாதிகள் வரலாம். உறவுகள் இடையே ஏமாற்றம் அடைதல், சொந்தங்கள் திடீர் என பிரிந்து போகுதல் போன்ற சூழல்கள் கொடுத்து விடும்.
5. குரு திசை:
இந்த திசையில் ஒருவருக்கு ஞானம், கல்வி, குடும்பத்தில் ஒற்றுமை ஆன்மீகத்தில் ஈடுபாடு திருமண யோகம், குழந்தை பாக்கியம், பணவரவு தொழிலில் சிறந்து விளங்குதல் போன்ற அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும். ஆனால் அசுப பலன்கள் என்று எடுத்துக் கொண்டால் சிலருக்கு புத்திர பாக்கியமின்மை குடும்பங்களில் பிரச்சனைகள், தொழிலில் இழப்பு வயிறு மற்றும் குடல் தொடர்பான நோய்கள் அவர்கள் சந்திக்கலாம்.

6. சுக்கிர திசை:
இந்த திசை நடக்கும் பொழுது ஒருவருக்கு திருமணம், காதல் கை கூடுதல் கணவன் மனைவி இடையே நல்ல அன்பு அதிகரித்தல் வீடு நிலம் வாங்குதல் போன்ற நிறைய யோகம் உண்டாகும். அசுப பலன் என்று எடுத்துக்கொண்டால் சிலருக்கு திருமணம் விவாகரத்தில் முடிந்துவிடும் அல்லது சொல்ல முடியாத அளவிற்கு கடன்களை அவர்கள் வாங்க நேரும்.
7. சனி திசை:
சனி திசையின் பொழுது பதவி உயர்வு, எதிரிகளை அழித்தல், கடன் தொல்லை விலகுதல், பூர்விக தொடர்பான நிலம் மற்றும் குழந்தை பாக்கியம், நீதிமானாக விளங்குதல் போன்ற அனைத்து நல்ல விஷயங்களும் இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் கிடைத்து ஒரு நல்ல மனிதராக மாறுவார்கள். அதுவே தீய பலன்கள் என்று எடுத்துக் கொண்டால் திடீரென்று ஒரு மரணம் எதிரிகள் தொல்லை அதிகமாவது கடன் தொல்லை அலர்ஜி எடுக்கும் முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டு பிரச்சனைகளை சந்திக்க நேரலாம்.
8. கேது திசை:
ஞானம், மோட்சம், ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கடவுளுக்கு சேவை செய்தல் வழக்குகளில் வெற்றி, புனித யாத்திரை சாஸ்திரங்களில் மிக உயர்ந்த ஞானத்தை பெறுதல் போன்ற அனைத்து விஷயங்களையும் பெறுவார்கள். அதுவே தீய பலன்கள் என்று எடுத்துக் கொண்டால் கெட்ட சிந்தனைகள் சேரக்கூடாத நட்புகள் அவமானங்கள் அசிங்கப்படுதல் அறுவை சிகிச்சைகள் போன்ற விஷயங்கள் இவர்கள் சந்திக்க கூடும்.
9. ராகு திசை:
ராகு திசை நடக்கும் பொழுது ஒருவருக்கு பூர்வீக தொடர்பான சொத்துக்கள் கைகளுக்கு வந்து சேரும். வெளிநாடு அல்லது பிறமொழி பேசும் இடங்களுக்கு சென்று உயர்வான நிலைக்கு செல்லுதல். கெட்ட பலன்கள் என்று எடுத்துக் கொண்டால் உறவுகளுக்கு இடையே பிரிவு சொத்துக்களில் இழப்பு போன்றவை உருவாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |