ஜூலை மாதத்தில் எந்த நாளில் புதிய வாகனம் வாங்கலாம்
எந்த பொருள் வாங்கவோ அல்லது என்ன புதிய தொழில் தொடங்கவோ நல்ல நேரம் என்பது மிக முக்கியம். அப்படியாக ஒருவர் ஒரு காரியத்தை சரியான நேரத்தில் செய்யும் பொழுது தான் அதற்கான நற்பலன்கள் அதிகம் கிடைக்கிறது.
அந்த விதத்தில் புதிய சொத்துக்கள், வாகனங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும் நல்ல நாள் பார்க்க வேண்டியது மிக அவசியம்.ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய ஐந்து நாட்களும் புதிய வாகனங்கள் வாங்குவதற்கு ஏற்ற நாட்களாக சொல்லப்படுகிறது.
அதிலும் வெள்ளிக்கிழமை மிகவம் அதிர்ஷ்டகரமான நாளாக கருதப்படுகிறது. அதே போல் திதிகளில் திரிதியை, பஞ்சமி, சஷ்டி, தசமி, ஏகாதசி, திரியோதசி, பெளர்ணமி ஆகியவை கார் அல்லது எந்த ஒரு புதிய வாகனங்கள் வாங்குவதற்கும் ஏற்ற நாட்களாகும்.
நட்சத்திரங்களில் சுவாதி, புனர்பூசம், அஸ்வினி, மகம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் புதிய வாகனங்கள் வாங்குவதற்கு ஏற்றதாக சொல்லப்படுகிறது.
அப்படியாக ஜூலை மாதத்தில் புதிய வாகனம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கீழ்கண்ட சுபமுகூர்தத்தில் வாங்க சிறப்பான நாளாக அமையும்.
ஜூலை 03 - காலை 07.10 துவங்கி, ஜூலை 04 காலை 05.28 வரை
ஜூலை 04 - காலை 05.28 துவங்கி, காலை 05.54 வரை
ஜூலை 08 - காலை 05.30 துவங்கி, 06.03 வரை
ஜூலை 14 - காலை 05.33 துவங்கி, மாலை 05.25 வரை
ஜூலை 15 - இரவு 07.19 துவங்கி,ஜூலை 16 காலை 12.30 வரை
ஜூலை 17 - காலை05.34 துவங்கி, இரவு 09.02 வரை
ஜூலை 22 - காலை 05.37 துவங்கி, பகல் 01.11 வரை
ஜூலை 24 - காலை 05.38 முதல் காலை07.30 வரை
ஜூலை 26 - பகல் 02.30 முதல் இரவு 11.30 வரை
ஜூலை 31 - காலை 05.42 துவங்கி, பகல் 03.55 வரை
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |