இந்த ஜாதக அமைப்பை கொண்டவருக்கு மனைவி நல்ல குணம் படைத்தவராக இருப்பார்களாம்

By Sakthi Raj Aug 28, 2026 12:04 PM GMT
Report

 ஜோதிட ரீதியாக ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய கணவன் மனைவி வாழ்க்கை முறை, தந்தை, தாய், உடன் பிறந்தவர்கள் எல்லோரும் எப்படி இருப்பார்கள் என்பதை பற்றி நாம் கணித்து தெரிந்து கொள்ள உதவியாக அமைகிறது.

அந்த வகையில், எந்த ஜாதக அமைப்பு கொண்டவருக்கு அவர்களுடைய மனைவி தினமும் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்யக்கூடிய அமைப்பு உருவாகும் என்பதை பற்றி பார்ப்போம். ஒரு ஆணினுடைய ஜனன ஜாதகத்தில் மனைவியை குறிக்கக்கூடிய கிரகமாக சுக்கிரன் உள்ளார்.

இந்த ஜாதக அமைப்பை கொண்டவருக்கு மனைவி நல்ல குணம் படைத்தவராக இருப்பார்களாம் | Which Men Will Have Good And Spiritual Wife

நீண்ட நாள் திருமணம் நடைபெறவில்லை என்ற கவலையா? இந்த ஒரு வழிபாட்டை செய்யுங்கள்

நீண்ட நாள் திருமணம் நடைபெறவில்லை என்ற கவலையா? இந்த ஒரு வழிபாட்டை செய்யுங்கள்

ஆன்மீக கிரகமான குருவும் இந்த சுக்கிரனும் தொடர்பு பெற்று லக்னத்திற்கு ஐந்து மற்றும் ஒன்பதில் நின்றாலும் அல்லது அவர்கள் சிம்மம், தனுசு ராசி வீடுகளில் நின்றாலும் அந்த ஆணுக்கு நல்ல ஆன்மீக உணர்வுகள் மற்றும் சாஸ்திர சம்பிரதாயங்களை கடைப்பிடித்து வாழக்கூடிய குணம் உள்ள மனைவி அமையும் என்று சொல்லப்படுகிறது.

இவர்கள் தினமும் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்யக்கூடிய வழக்கத்தை பின்பற்றுவார்கள். ஆனால், இந்த குருவும் சுக்கிரனும் சனியினுடைய தொடர்பில் இல்லாமல் இருப்பது சிறப்பு, சனியின் தொடர்பு பெற்றால் ஒரு வாரம் விளக்கேற்றினால் மறுவாரம் செய்யாமல் போகலாம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US