இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தேவதைகளாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் கடவுளால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
ஒருவரின் ஆளுமை அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் முக்கிய இடம் வகிக்கிறது.
குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சிவபெருமானுக்கு பிடித்தவர்களாக இருப்பார்களாம். இன்னும் சிலர் விநாயகருக்கு பிடித்தவர்களாக இருப்பார்களாம். அதே போன்று சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் லட்சுமி தேவியின் ஆசி பெற்றவர்களாக இருப்பார்கள்.
அவர்களுக்கு அதிர்ஷ்டம், பெயர், புகழ் உள்ளிட்ட அனைத்தும் நிறைந்திருக்கும். அவர்கள் இருக்கும் இடம் தெய்வம் இருக்கும் இடமாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்துடன் பிறந்த பெண்கள் என்னென்ன நட்சத்திரம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ரோகிணி | லக்ஷ்மி தேவிக்கு பிடித்தமான நட்சத்திரங்களில் ஒன்று தான் ரோகிணி. இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்களின் அதிபதியாக சுக்கிரன் இருக்கிறார். இவர்கள் மற்றவர்கள் போல் அல்லாமல் செல்வம், காதல், பொருள் இன்பம் மற்றும் ஆடம்பரத்திற்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில் பணத்தால் ஒருபோதும் பிரச்சினை ஏற்படாது. இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்சாலிகளாக பார்க்கப்படுகிறார்கள். |
புனர் பூசம் | இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். தங்களின் வேலைகளை அவர்களே செய்து கொள்வார்கள். இவர்கள் வேலை செய்யும் துறையில் சிறந்து விளங்குவார்கள். அவர்கள் மற்ற பெண்களுக்கு எப்போதும் முன்மாதிரியாக இருக்க விரும்புவார்கள். புனர் பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் அதிகமாக இருக்கும். |
அனுஷம் | அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், துணிச்சலானவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் பணியில் தீவிர ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் இருப்பார்கள். அவர்களின் வாழ்க்கையில் மகத்தான வெற்றிகள் வந்து கொண்டே இருக்கும். எந்த வேலைக் கொடுத்தாலும் சிறப்பாக செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். அவர்களின் வேலைகள் அனைத்து நேர்த்தியாக இருக்கும். ஒரு போதும் வேலைகளை ஒத்தி வைக்கமாட்டார்கள். |
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |