ஜாதகத்தில் இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் திருமண வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும்

Report

ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு பலன்களை கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. அந்த வகையில், ஜாதகத்தில் ஒரு கிரகத்தோடு எந்த கிரகம் இணைகிறதோ அதற்கு தகுந்தாற் போல் நம்முடைய பலன்கள் மாறுகிறது.

அப்படியாக, திருமண வாழ்க்கை என்று எடுத்துக் கொள்ளும் பொழுது எல்லோருக்கும் இனிமையான எதிர்பார்த்ததைப் போல் திருமண வாழ்க்கை அமைவதில்லை. ஒரு சிலர் அந்த திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை என்றாலும் பொறுத்துக் கொண்டு செல்லக்கூடிய நிலை உருவாகிறது.

ஜாதகத்தில் இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் திருமண வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும் | Which Planet In Horoscope Bring Bad Marriage Life

கோயிலுக்கு சென்று வீடு திரும்பியதும் செய்யக்கூடாத முக்கியமான விஷயங்கள்

கோயிலுக்கு சென்று வீடு திரும்பியதும் செய்யக்கூடாத முக்கியமான விஷயங்கள்

 

ஜாதக ரீதியாக எந்த கிரக அமைப்பு கொண்டவர்களுக்கு திருமண வாழ்க்கை கசப்பாக இருக்கும்? யார் சகித்துக் கொண்டு வாழக்கூடியவர்கள் என்று பார்ப்போம். ஒரு ஜாதகத்தில் சந்திரன் மற்றும் ராகு சேர்க்கை பெற்றிருந்தாலும் இது தம்பதியர் இடையே தேவையற்ற சந்தேகங்களை உருவாக்கும். மன குழப்பங்கள் மற்றும் அதீதமாக யோசித்து துணையுடன் வாக்குவாதம் செய்யக்கூடிய நிலையை உருவாக்கிவிடும்.

மேலும், ஏழாம் இடம் மற்றும் 11ஆம் இடம் ஒருவருக்கு வலுவாக இருக்க வேண்டும். இதுதான் ஒருவர் திருமண வாழ்க்கையில் நிலை தன்மையை குறிக்ககூடியது. இது பலவீனமாக இருந்தாலும் இனிமையான திருமண வாழ்க்கை அமையாது.

அதேபோல், ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் ராகு அல்லது செவ்வாய் கேது சேர்க்கை இருந்தாலும் அது உறவுகளிடையே கோபம் அடிக்கடி சண்டை ஏற்படுவதற்கான காரணமாக அமைகிறது.

ஜாதகத்தில் இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் திருமண வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும் | Which Planet In Horoscope Bring Bad Marriage Life 

மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு சொந்தத்திலேயே திருமணம் நடக்கக்கூடிய வாய்ப்பு உண்டு

மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு சொந்தத்திலேயே திருமணம் நடக்கக்கூடிய வாய்ப்பு உண்டு

மேலும், கர்ம காரகனாக இருக்கக்கூடிய சனி பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் 3, 6, 8, 10 அல்லது 12 ஆம் இடங்களில் அமைகின்ற பொழுது இது தம்பதியர் இடையே ஒரு நல்ல இணக்கமான நிலையை கொடுக்காமல் மனக்கசப்புகளை கொடுக்கிறது.

இந்த கிரக அமைப்புகள் பார்த்து பயந்து அச்சம் கொள்ளாமல் நம்முடைய மனதன்மையை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல் நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவசியம். கிரகங்கள் என்பது எதிர்காலத்தை கணித்து சொல்ல கூடியதை தாண்டிலும் அது நம்மை மாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பாகவும் அவை அமைகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

   

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US