செல்வம் பெருக எந்த மரத்தின் கீழ் விளக்கேற்றனும்?
பொதுவாக வீட்டில் அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் பெருக வேண்டும் என்றால், வாஸ்து சாஸ்திரம் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் இந்த பதிவில் எந்தெந்த மரத்தின் கீழ் விளக்கேற்றினால் அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் பெருகும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அரச மரத்தின் கீழ் விளக்கேற்றினால் விஷ்ணு பகவான் மகிழ்ச்சி அடைவதுடன் செல்வமும் பெருகுமாம்.
ஆல மரத்தின் அருகில் விளக்கேற்றினால் செல்வம் பெருகுவதுடன், எதிர்பார்க்காத அளவிற்கு பணம் குவியுமாம்.
வாழை மரத்தின் கீழ் விளக்கேற்றினால் லட்சுமி தேவி மகிழ்வாள். இதனால் செல்வம் உங்களுக்கு குவியுமாம்.
வேப்ப மரத்தடியில் விளக்கேற்றினால் செல்வத்தை பெறுவதுடன், வீட்டில் மகிழ்ச்சியும் காணப்படுமாம்.
இதே போன்று நெல்லிக்காய் மரத்தடியில் ஒரு விளக்கினை ஏற்றினால் எதிர்பார்க்காத அளவிற்கு செல்வத்தை பெற முடியுமாம்.
துளசி செடியின் முன்பு விளக்கேற்றினால் லட்சுமி தேவியின் அருள் பெறுவதுடன், செல்வத்தையும் பெற முடியும்.
வன்னி மரத்தடியில் ஒரு விளக்கினை ஏற்றினால் சனிபகவான் மகிழ்ச்சி அடைவதுடன், செல்வமும் பெருகுமாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |