12 ராசிகளில் அதிகமாக ஏமாறக்கூடிய ராசிகள் யார் தெரியுமா?
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசியின் சந்திரன் பொறுத்து ஒவ்வொருவருடைய குணாதிசயங்கள் மாறுகிறது. அந்த வகையில், ஒருவர் இயல்பாகவே எல்லா விஷயங்களும் நம்புவதிலும் எளிதில் ஏமாற கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
மீனம்:
இவர்கள் மனம் மிகவும் இளகிய மனம் யாராவது இவர்களிடம் மென்மையாக பேசினால் இவர்கள் அதை உடனடியாக நம்பி விடுகிறார்கள். அதேபோல், யாராவது தங்களுக்கு கஷ்டம் என்று சொன்னால் இவர்கள் முன்வந்து உதவக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்களுடைய அழகான மனமே இவர்களுக்கு பலம் என்றாலும் அதுவே சில நேரம் பலவீனமாக அமைந்து விடுகிறது.

கடகம்:
இவர்கள் பாசத்திற்காக உயிரையே கொடுக்கக் கூடியவர்கள். ஒருவர் தங்களுக்கு நெருங்கியவர் என்று நினைத்து விட்டால் அவர்களுக்காக எதையும் எதிர்பாராமல் செய்வார்கள். இருப்பினும் ஒரு சிலர் இவர்களுடைய நல்ல மனதை புரிந்து கொள்ளாமல் இவர்களை அடிக்கடி காயப்படுத்துவதை நாம் பார்க்கலாம்.
துலாம்:
எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நல்ல எண்ணம் படைத்தவர்கள். மேலும், ஒருவருக்கு இல்லை என்று சொல்லத் தெரியாதவர்கள். பிறரின் சுயநலத்திற்கு இவர்கள் பாதிப்பது உண்டு. இருப்பினும் அவர்கள் அதை மிகப்பெரிய அளவில் பொருட்படுத்துவதில்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |