முத்து ஆபரணம் யார் அணியலாம்?யார் அணியக்கூடாது?
மனிதர்களுக்கு ஆபரண அணிகலன் மீது எப்பொழுதும் ஒரு தனி பிரியம் உண்டு.அப்படியாக வைரம், முத்து, நீலம், மரகதம் உள்ளிட்ட பல ரத்தினங்களை அணிய விரும்புவோர் கட்டாயம் ஜோதிட நிபுணர்களின் ஆலோசனை பெற்ற பிறகு தான் அணியவேண்டும்.
அந்த வகையில் முத்து ஒரு அதிர்ஷ்ட ரத்தினமாக பார்க்கப்படுகிறது.நாம் இப்பொழுது அதை யார் அணியலாம்?யார் அணியக்கூடாது?என்று பார்ப்போம்.
ஜோதிடத்தில் சந்திரனின் நிலை பலவீனமாக இருக்கும்போது முத்து ரத்தினத்தைப் பயன்படுத்துவது அந்த ராசியினருக்கு நல்ல மாற்றம் உண்டாகும்.காரணம் ஜோதிடத்தில் முத்து சந்திரனுக்கு பிடித்த ரத்தினமாகும்.
மேலும் இந்த முத்து அணியவேண்டும் என்றால் கட்டாயம் ஜோதிடரின் ஆலோசனை பெறுவது அவசியம்.அவ்வாறு முத்து அணியலாம் என்றால் அதை திங்கட்கிழமையில் அணியவேண்டும்.சிலருக்கு வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்பட்டு கொண்டு இருக்கும்.
மனஅமைதி இல்லாமல் இருப்பார்கள்.அவர்கள் முத்து அணியும் பொழுது அவரக்ளுக்கு மன அமைதி சந்தோசம் உண்டாகும்.முத்து ஒருவர் ஆயுளை மிகவும் பலப்படுத்துகிறது.அதே போல் சிலருக்கு இயல்பாக கோபம் அதிகம் வரும்.
அதனால் வீண் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள்.அவர்களும் முத்து அணியலாம்.அவ்வாறு அணியும் பொழுது அவர்களின் கோபம் குறையும் என்று நம்பப்படுகிறது.
அதே போல் முத்து அணிய சிறந்த ராசியினராக மேஷம், கடகம், விருச்சிகம், தனுசு மற்றும் மீனம் ராசிக்காரர்கள் இருக்கிறார்கள்.இவர்கள் வெள்ளி மோதிரத்துடன் முத்து அணிவது மங்களகரமானது. ரத்தினம் தூய்மையானது என்று பலர் நம்புகிறார்கள். இதை அணிவதால் செழிப்பையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |