ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட ராசிகள் யார் தெரியுமா?
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிகளுக்கும் தனித்தன்மை உண்டு. அப்படியாக, ஆன்மீகத்தில் இயல்பாகவே அதிகம் நாட்டம் கொண்டு இறைவழிபாட்டில் ஆர்வம் உடைய ராசிகள் யார் என்று பார்க்கலாம்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு ஒருவரை எடைப்போடுவதில் அவர்கள் மிகவும் திறமை சாலிகள். இவர்களுக்கு இயல்பாகவே இறை நம்பிக்கை அதிகம் இருக்கும். மீன ராசிக்காரர்கள் எப்பொழுதும் எதை செய்தாலும் இறைவழிபாடு செய்யாமல் தொடங்க மாட்டார்கள். கவலை வந்தால் அவர்கள் தேடி செல்லும் ஒரே இடம் ஆலயமாகத்தான் இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் மிகுந்த தெளிவான சிந்தனையுடன் இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையை பற்றிய அதீத ஆராய்ச்சியில் ஈடுபாடு செலுத்துவார்கள். வாழ்க்கையின் நோக்கத்தையும், இறை சக்தியின் தேடுதலும் இவர்களிடம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.
தனுசு:
எதையும் பொறுமையாக கையாளும் தனுசு ராசிக்காரர்கள் எப்பொழுதும் இறை சிந்தனையுடனே இருப்பார்கள். இவர்களுக்கு ஆன்மீகத்தில் சிறு வயதில் இருந்தே அதிகம் நாட்டம் இருக்கும். நேரம் தவறாமல் இறைவழிபாடு செய்வதில் இவர்கள் முதல் இடம் பிடிப்பார்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் மிகவும் நம்பிக்கை உடையவர்கள். இவர்கள் எப்பொழுதும் தனக்கு மேல் ஒரு சக்தி இயங்கி கொண்டு இருக்கிறது என்று தீர்க்கமாக நம்பக்கூடிடயவர்கள். பிறப்பு இறப்பு பற்றிய தேடுதல் இவர்களிடையே அதிகம் காணப்படும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |