ஜூன் 2025: எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மாதமாக அமையப்போகிறது?

By Sakthi Raj Jun 03, 2025 11:35 AM GMT
Report

  ஜோதிடத்தில் 9 கிரகங்களின் மாற்றம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த கிரகங்களின் மாற்றம் 12 ராசிகளுக்கும் ஒருவித தாக்கத்தை உண்டு செய்யும். அந்த வகையில் இந்த மாதம் குரு பகவான் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க உள்ளார். அதனால் ஜூன் மாதம் எந்த ராசிகளுக்கு சிறப்பாக அமைய போகிறது என்று பார்ப்போம்.

மேஷம்:

மேஷ ராசிக்கு ஜூன் மாதம் மிக சிறந்த மாதமாக அமைய உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தொழில் ரீதியாக பயணம் செல்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும்.

மிதுனம்:

மிதுன ராசிக்கு இந்த ஜூன் மாதம் மகிழ்ச்சி நிறைந்த மாதம் ஆகும். இறையருளால் நீங்கள் மிக பெரிய இடத்திற்கு செல்வீர்கள். உங்கள் உடலில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக அமையும். சிலருக்கு தொலை தூர பயணம் மகிழ்ச்சியை கொடுக்கும்.

கடகம்:

இந்த ஜூன் மாதம் கடக ராசிக்கு மனதில் தெளிவு பிறக்கும். புதிய திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் சந்தித்த பொருளாதார நெருக்கடிகள் முற்றிலுமாக விலகும். சிலர் நண்பர்களுடன் பொழுது நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். மனதிற்கு பிடித்த ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி:

கன்னி ராசிக்கு இந்த ஜூன் மாதம் ராகு பெயர்ச்சி சில சிக்கலை கொடுத்தாலும். பல சவால்களுக்கு மத்தியில் நினைத்ததை சாதிப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பணமும், வேலையும் உங்களை தேடி வரும். திடீர் பொருளாதார வரவு உங்களுக்கு மன நிறைவை கொடுக்கும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US