இந்த ராசிக்காரர்கள் தவறியும் வைரம் அணியக்கூடாது
பொன்,நகை,ஆபரணம் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும்.அதிலும் வைரம் என்றால் அனைவருக்கும் ஒரு வகையான ஈர்ப்பு உண்டு.ஆனால் ஜோதிட சாஸ்திரப்படி சில குறிப்பிட்ட ராசிகள் வைர நகைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.
அந்த வகையில் எந்த ராசிக்காரர்கள் வைரம் அணியலாம் அணியக்கூடாது.வைரம் அணியும் முன் நாம் செய்யவேண்டியவை பற்றி பார்ப்போம்.
ராசிகளில் மேஷம், சிம்மம், விருச்சிகம், தனுசு மற்றும் மீனம் ராசிக்காரர்கள் வைரம் அணிவதை தவிர்க்க வேண்டும். வைரம் அணிவது அவர்களுக்கு அசுபமானது என்று கூறப்படுகிறது.வைரம் அணியவேண்டும் என்று எல்லாருக்கும் ஆசை இருந்தாலும் சிலருக்கு வைர நகைகள் ஒத்து போவது இல்லை.
அதனால் அவர்களுக்கு வாழ்க்கையில் சில சங்கடங்கள் உருவாகும்.காரிய தடை போன்ற விஷயங்கள் நடக்கும்.மேலும் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் வைரம் அணியலாம்.
அவை அவர்களுக்கு நல்ல வளர்ச்சியை கொடுக்கும்.ஜோதிடர்களின் கூற்றுப்படி, ஜாதகத்தில் சுக்கிரன் யோக முகவராக இருக்கும்போது மட்டுமே வைரம் அணிய வேண்டும். ஜாதகத்தில் சுக்கிரன் சுப நிலையில் இருந்து, உச்ச நிலையில் இருந்தால், வைரம் அணிவது மங்களகரமானது.
சுக்கிர மகாதசையில் மட்டுமே வைரத்தை அணிய முடியும்.வைரம் உகந்த ராசியினர் வைரம் அணியும் பொழுது அவர்களுக்கு வளர்ச்சி நல்ல விதமாக அமையும்.சந்தோஷமான வாழ்க்கை அமையும்.வைரம் அணிவதால் ஆயுட்காலமும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் வைரத்தை ஒருவர் அணியவேண்டும் என்று முடிவு எடுத்தால் சுக்ல பக்ஷமும் வெள்ளிக்கிழமை சூரிய உதயத்திற்குப் பிறகு வைரத்தை அணிய வேண்டும். பால், கங்கை நீர், கற்கண்டு, தேன் போன்றவற்றால் சுத்திகரிக்க வேண்டும். பிறகு அதை அணிந்து கொள்வது நன்மை தரும்.இவ்வாறு செய்யும் பொழுது வைரம் அணிந்ததற்கான முழு பலனையும் பெற முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |