ஜோதிடம்:அதிகம் பொய் பேசும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
இந்த உலகத்தில் உண்மை பேசுபவர்கள் காட்டிலும் நேரத்திற்கு ஏற்றது போல் பொய் பேசுபவர்கள் தான் அதிகம்.அப்படியாக ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும்.அந்த வகையில் அவர்கள் உண்மையை பேசவேண்டும் என்று நினைத்தாலும் அவர்களால் உண்மையை பேச முடியாது.அந்த வகையில் எந்த ராசிக்காரர்கள் அதிகம் பொய் பேசுவார்கள் என்று பார்ப்போம்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் எப்பொழுதும் ஒருவரை சார்ந்து இருக்கும் ராசிக்காரர்கள்.ஆனால் உண்மையில் அவர்கள் ஆழ்மனதில் மிகவும் பயம் கொண்டவர்கள்.இவர்கள் ஒரு விஷயத்தை பிறரிடம் சொல்லவேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டால் அதை மறைக்க பல பொய்கள் தயங்காமல் சொல்வார்கள்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் எளிதில் அவர்கள் மனதில் உள்ள வலியை பிறரிடம் பகிர்ந்து கொள்ளமாட்டாரகள்.அவர்கள் அதிகம் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசாதவர்கள்.எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் நான் நன்றாக உள்ளேன் என்று பொய் சொல்லுபவர்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவர்களின் மனம் கஷ்டப்படாமல் இருக்க அவர்களுடைய வலியை மறைத்து நிறைய பொய் சொல்லுவார்கள்.இதனால் சமயங்களில் பிறரிடம் மாட்டிக்கொள்வதுண்டி.சாதாரண விஷயங்களுக்கு கூட உண்மை பேச தயங்குபவர்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்கள் வேலை சம்பந்தமாக நிறைய பொய் சொல்லுவார்கள்.தொழிலில் அவர்களுக்கு பெரிய துன்பம் ஏற்பட்டாலும் தனியாக இருந்து சாதித்து கொள்வேன் என்று சொல்லிவிட்டு மனதிற்குள் வருத்தம் அடைவார்கள்.இவர்களுக்கு தேவைக்கு ஏற்ற பொய் சொல்லி வேலையை பூர்த்தி செய்து கொள்வார்கள்.
மிதுனம்:
ஏதேனும் பிரச்சனை என்றால் அவர்கள் மிகவும் பயந்து விடுவார்கள்.தனக்கு ஒரு பிரச்சனை என்றால் தன் மீது தவறே இருந்தாலும் நான் நல்லவன் என்று காட்டிக்கொள்ள எந்த அளவிலும் இறங்கி பொய் சொல்லக்கூடியவர்.மேலும் இவர்கள் தங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றாலும் காரியத்தை சாதிக்க அவர்களை பற்றி புகழ்ந்து பொய் பேசுவார்கள்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |