வாஸ்து:வீட்டில் மீன் வளப்பவர்கள் கவனத்திற்கு-தவறியும் இந்த நிற மீன்களை வளர்க்காதீர்கள்
நம் வீடுகளில் செல்லப்பிராணியை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவோம்.அப்படியாக வாஸ்து படி பலரும் மீன்களை விருப்பி வளர்ப்பார்கள்.ஏன் நமது முன்னோர்கள் காலத்தில் இருந்து இந்த மீன்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம்.
அந்த அளவிற்கு மீன்கள் அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது.அதனாலேயே வாஸ்து ரீதியாக வீடுகளில் வியாபார இடங்களில் மீன்களை வளர்க்கின்றனர்.அந்த வகையில் வீட்டில் எந்த நிற மீன் வளர்த்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.
வீட்டில் தங்க நிற மீன் வளர்ப்பதால் வீட்டில் யோகம் உருவாகும் செல்வம் பெருகும்.பச்சை நிற மீன்கள் வளர்ப்பதால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.வீட்டில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.குழந்தைகள் கல்வியில் வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள்.
சிவப்பு நிற மீன்கள் வளர்த்தால் நம்மை நோக்கி வரும் ஆபத்துகளில் இருந்து நம்மை காப்பாற்றும்.மஞ்சள் நிற மீன் வளர்ப்பதால் வீட்டில் இருக்கும் நபர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.வீட்டில் செய்யும் வேலைகள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும்.
கருப்பு நிற மீன் வளர்ப்பதால் வீட்டில் உள்ள கண் திருஷ்டிகள் விலகும்.நாம் வீடுகளில் பல வண்ணங்களில் மீன் வளர்த்தாலும் கட்டாயம் கருப்பு நிறத்தில் மீன் வளர்ப்பது அவசியம். நம் வீட்டில் மீன் வளர்ப்பதால் வீட்டில் உள்ள துன்பத்தை அது தாங்கி கொள்ளும்.
மேலும்,சில நேரங்களில் நம் வீட்டில் நன்றாக இருந்த மீன் இறந்து கிடப்பதை பார்த்து இருப்போம்.காரணம் அவை நம் வீட்டில் நடக்கும் தீயவைகளை உள்வாங்கியதால் சமயங்களில் அறிகுறியாக இருக்கலாம்.ஆக வீட்டில் திடீர் என்று மீன் இறந்து போனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மீன்களை நாம் பார்க்கும்வண்ணம் கண்ணாடி தொட்டியில் வளர்ப்பது சிறந்தது.மீன் தொட்டியை வீட்டின் வாசலின் அருகில் வைப்பது சிறப்பு. படுக்கை அறை, சமையல் அறை, படிக்கும் அறையில் வைக்கக் கூடாது.
அதிக இனப்பெருக்கம் செய்யும் மீன்களை வீட்டில் வளர்க்கக் கூடாது.தன் இனத்தையே சாப்பிடும் மீன்களை கட்டாயமாக வளர்க்கக் கூடாது.மீன்களை நாம் பார்க்கும்வண்ணம் கண்ணாடி தொட்டியில் வளர்ப்பது தான் சிறந்தது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |