இந்த ராசியில் பிறந்த பெண்களுக்கு அதிகாரம் செய்யும் மாமியார் தான் அமைவார்களாம்
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கர்ம வினையின் தொடர்புகள் இருக்கிறது. அந்த வகையில், ஒரு சில ராசிகள் பிறந்த பெண்களுக்கு அவர்களுடைய மாமியார் மிகுந்த அன்பாகவும் பாசத்தை கொடுப்பவராகவும் இருக்கிறார்.
ஆனால், ஒரு சிலர் ராசியில் பிறந்த பெண்களுடைய மாமியார் அவர்களை அதிகாரம் செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில், எந்த ராசியில் பிறந்த பெண்களுக்கு அதிகாரம் கொண்ட மாமியார் அமைவார்கள் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்த பெண்கள் எப்போதும் துணிச்சல் ஆகவும் துடிப்பாகவும் செயல்பட கூடியவர்கள். இவர்களுடைய இந்த செயல்பாடு இவர்களுடைய மாமியாருக்கு பல நேரங்களில் எரிச்சலை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் மேஷ ராசியில் பிறந்த பெண்களை அவர்களுடைய மாமியார் புரிந்து கொள்வதற்கு நாள் எடுத்துக் கொள்வதால் ஆரம்பத்தில் சிக்கலை சந்திக்கிறார்கள்.
கடகம்:
கடக ராசியினர் மிகவும் மென்மையானவர்கள் மிகவும் அன்பானவர்கள் உண்மையின் ரூபமாக இருக்கக்கூடியவர்கள். ஆனால், இவர்களுக்கு வரக்கூடிய மாமியார் இவர்களுக்கு நேர்மாறாக இருக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். தாமரை இலையில் எப்படி நீர் ஒட்டாமல் இருக்கிறதோ அதைப்போல் இவர்களுடைய மாமியார் உடைய குணம் இருக்கிறது. இருவருக்கும் செட்டாகாது.
துலாம்:
துலாம் ராசி பொருத்தவரை இவர்கள் சம நிலையில் வாழ கூடியவர்கள் இவர்களுக்கு வரக்கூடிய மாமியாரிடம் இவர்கள் அதிக அன்பு வைத்திருந்தாலும் அந்த மாமியார் இவர்களிடம் அன்பும் சண்டையும் அதிகம் போடக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அதாவது ஒரு நேரம் சண்டை அதிகமாக இருந்தால் ஒரு நேரம் அன்பு அதிகமாக இருக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |