கோவிலில் முடி காணிக்கை கொடுக்கும் பொழுது இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்
இந்துக்கள் வழிபாடுகளில் கோவில்களில் நேர்த்திக்கடன் செலுத்துவது என்பது மிகவும் முக்கியமான சடங்காகவே இருக்கிறது. இந்த நேர்த்திக்கடனில் பெரும்பாலானவர்கள் முடி காணிக்கை செலுத்துவதை பரவலாக செய்து வருகிறார்கள்.
இந்த நேர்த்திக்கடன் பார்ப்பதற்கு மிகவும் எளிமையாக இருந்தாலும் முடி காணிக்கை பின்னால் ஒரு ஆழமான ஆன்மீகம் மற்றும் அறிவியல் காரணம் உள்ளது.

கோவில்களில் முடி காணிக்கை செய்வதின் ஆன்மீக காரணங்கள்:
1. இந்த உலகத்தில் மனிதர்களிடம் இருக்கவே கூடாது ஒரு விஷயம் அகந்தை. அதில் ஒரு மனிதனுடைய அழகிற்கு ஈர்ப்பு அவருடைய தலை முடி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆக, அழகுக்கு அடையாளமாக விளங்கக்கூடிய இந்த தலை முடியை நீக்குவது வழியாக ஒருவருடைய அகந்தை தலைகனம், ஆணவம் முற்றிலும் அழிகிறது. இதனால் பெரிய அளவில் கர்ம வினைகளும் விலகுகிறது.
2. மேலும், ஒரு மனிதனுடைய மிக உயர்ந்த பாகம் தலைமுமுடியாக இருக்கிறது. அந்த உயர்ந்த பாகத்தை இறைவனுடைய பாதத்தில் சமர்ப்பித்து இறைவனிடம் முழுமையாக தன்னை ஒப்படைக்கிறேன் என்பதையும் குறிக்கிறது.
3. நான் மொட்டை அடிக்கும் பொழுது நம்முடைய பழைய பாவங்கள், கெட்ட எண்ணங்கள், எதிர்மறை ஆற்றல்கள் இவை எல்லாம் விலகி ஆன்மிக ரீதியாக புதிய மனிதனாக அதாவது ஒரு மறுபிறவி கிடைப்பதாக சொல்லப்படுகிறது.

முடி காணிக்கை செலுத்துவதற்கு முன் கவனிக்க வேண்டியவை:
பலரும் முடி காணிக்கை செலுத்துகின்ற பொழுது அவர்களுடைய வசதியான நாட்களுக்கு சென்று காணிக்கை செலுத்துவது என்று செய்கிறார்கள். அவ்வாறு இல்லாமல் சாஸ்திர முறைகளில் படி முடி காணிக்கை செலுத்துவதற்கு கிழமை, திதி நட்சத்திரம் நல்ல நேரம் ஆகியவற்றை பார்த்து பிறகு காணிக்கை செலுத்துவது நன்மையை கொடுக்கும்.
மேலும், முடி காணிக்கை செலுத்துவதற்கு உகந்த நாளாக திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்கள் இருக்கிறது. செவ்வாய் சனி, ஞாயிறு இந்த மூன்று நாட்களில் முடி காணிக்கை செலுத்துவதை தவிர்த்து விடுங்கள்.
கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வதற்கும் முடி காணிக்கை செய்வதற்கும் காலை நேரமே சிறந்ததாக இருக்கிறது. பல நேரங்களில் மனிதர்கள் கோவில்களுக்கு முடி காணிக்கை செலுத்திய பிறகு அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் பெரும் மாற்றம் சந்தித்ததாக சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |