நாம் கடவுளிடம் வைத்திருப்பது பக்தியா?பயபக்தியா?
கடவுள் இவர் பொதுவானவர்.ஆனால் மனிதர்கள் பல வகையானவர்கள்.அதே போல் தான் மனிதன் கடவுள் மீது வைத்திருக்கும் பக்தியும்.இங்கு பெரும்பாலான மக்கள் கடவுளிடம் உண்மையான பக்தியோடும் இன்னும் சிலர் பயபக்தியோடும் இன்னும் வெகு சிலர் தேவைக்கு பக்தி என்றும் வாழ்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் இவை எல்லாவற்றிக்கும் உள்ள வேறுபாடுகளும் நாம் கடவுள் மீது எவ்வாறு பக்தி செலுத்த வேண்டும் என்பதை பற்றியும் பார்ப்போம். ஆன்மீகத்தை வாழ்க்கையை முழுமையாக புரிந்தவர்களால் மட்டுமே எதையும் எதிர்பார்க்காமல் பக்தி செலுத்த முடியும்.
பக்தி செலுத்தவது என்பது நேர போக்கு அல்ல.அவர்கள் தன்னை ஒரு பக்தியான நபராக வெளி உலகத்திற்கு காட்டவேண்டும் என்று மெனக்கிட்டு செய்யவில்லை.அவர்கள் பக்தியில் திளைக்கிறார்கள்.காரணம் அவர்கள் மாயை உலகில் சிக்காதவர்கள்.உண்மை நிலை உணர்ந்தவர்கள்.
அந்த உண்மையை கொண்டாடும் வகையில் அவர்கள் பக்தி செலுத்துகிறார்கள்.அவர்களின் நோக்கமே உணர்தல்.இது தான் உண்மையான பக்தி.ஆனால் இன்னும் சிலர் இருக்கிறார்கள்.
அவர்களது கவலை,எங்கு நாம் பூஜை செய்யாமல்,கடவுளை வழிபடாமல் போனால் ஏதேனும் தப்பு வீட்டில் நடந்து விடுமோ?என்ற பயத்தால் அவர்கள் இறைவழிபாட்டை மேற்கொள்வார்கள்.இன்னும் சிலர் கடவுளை ஒரு மந்திரவாதியாகவே பார்ப்பார்கள்.அதாவது நான் பக்தன்.நீ கடவுள்.
நான் வேண்டுவதை நீ செய்வது உன் கடமை அதை செய்யாவிட்டால் நீ கடவுள் இல்லை என்று தேவைக்கு வழிபாடு செய்வார்கள்.இன்னும் சிலர் போட்டிக்கு வழிபாடு செய்வது உண்டு.அதாவது பக்கத்து வீட்டில் கோயிலுக்கு போனார்கள் என் சொந்தம் குலதெய்வம் கோயிலில் இதை செய்தார்கள்.
அதனால் அவர்களுக்கு போட்டியாக செய்வேன் என்று செய்வது உண்டு. உண்மையில் பக்தி எதையும் எதிர்பார்க்காதது.தாய் பிள்ளையை போல் உறவு.அவர்கள் அருகில் தான் கடவுள் வருவார்.அவர்கள் தான் ஆனந்த நிலையை அடைவார்கள்.
ஒரு மனிதனுக்கு கிடைக்கும் மிக பெரிய பாக்கியம் அவன் கடவுளை உணர்தலே ஆகும்.ஆக கடவுள் அவர் மாயை தாண்டிய ஒரு சக்தி.எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நாம் இறைவனை சரண் அடைவதே நாம் செய்யும் உண்மையான பக்தி ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |