கும்ப ராசியினர் இவர்களுடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்? யார் தெரியுமா ?
ஜோதிடத்தில் பதினோராவது ராசியாக இருக்கக்கூடிய கும்ப ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். அப்படியாக கும்ப ராசியினருக்கு எந்த ராசியினர் அதிர்ஷ்டம் தரக்கூடியவர்களாகவும்? எந்த ராசியினருக்கு கும்ப ராசியினர் ஒத்து வராத ராசியினர் என்று பார்ப்போம்.
முதலில் கும்ப ராசியினர் காற்று ராசியாக இருக்கிறார்கள். ஆதனால் இவர்களுக்கு காற்று ராசியாக இருக்கக்கூடிய மிதுனம் மற்றும் துலாம் ராசியினர் நல்ல நெருங்கிய நண்பர்களாகவும் எப்பொழுதும் ஒரு நல்ல உறவு முறையை பேணக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.
மேலும், காற்று ராசியாக இருக்கக்கூடிய கும்ப ராசிக்கு நிலம் ராசியாக இருக்கக்கூடிய ரிஷபம், மகரம், கன்னி ஆகிய ராசிகள் ஒத்து வராத ராசியாக இருக்கிறார். அதாவது ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு காரகத்துவம் உள்ளது.
அது மற்றொரு ராசியுடன் ஒத்துப் போகக்கூடிய நிலையிலும் ஒரு சில ராசிகளுடன் ஒத்துப்போகாத நிலையும் குறிக்கிறது. ஆக, ஒத்துப் போகாத ராசிகளுடன் நாம் பழக முயற்சி செய்தாலும் நாம் அவர்களுடன் பழகுவதற்கான ஒரு வாய்ப்புகளும் இல்லாமல் போவதும் அல்லது அந்த உறவுகள் நீண்ட நாள் நிலைப்பதற்கான ஒரு சூழ்நிலை உருவாக்குவது இல்லை.
இதை நாம் தெரிந்து கொள்ளும்போது உறவுகளில் இடையே ஏற்படக்கூடிய விரிசலை சரியாக புரிந்து கொள்ள முடியும். மேலும், கும்ப ராசிக்கு எந்த ராசியினர் ஒத்து வராத ராசியினர்? யார் அதிர்ஷ்டம் கொடுப்பார்கள் என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |