உங்களுடன் பழகுபவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

By வாலறிவன் Aug 06, 2024 06:30 AM GMT
Report

உலகில் ஆன்மிகவாதிகள் அதிகரித்து விட்டனர்., கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற கூற்று மாறி வீடுகளின் எண்ணிக்கையை விட கோவில்கள், மட ஆலயங்கள், போதனை மையங்கள், தியான கூடங்கள், அதிகமாகி விட்டன, உலகில் பிறந்த அத்துணை உயிர்களுக்கும் தாகம் என்பது ஒரே மாதிரி தான் இருக்கும்.

அதை தணிக்க பருகும் பொருள் மற்றும் அதன் அளவு வேண்டுமானால் வெவேறாக இருக்கலாம். யானை குடிக்கும் நீரின் அளவும் எறும்பு க்கும் மனிதனுக்கும் வித்தியாசம் உண்டு.

அல்லவா ஆனால் அவரவர் தேவைக்கு ஏற்ப பருகி நிறைவடைகிறோம் அதுபோல இறைவன் ஒருவனே என்ற கருத்து உண்மையானால் அவனை அடையும் வழி வேண்டுமானால் நிறைய இருக்கலாம்.

உங்களுடன் பழகுபவர்கள் எப்படிப்பட்டவர்கள்? | Who Is The Good Person

இறைவன் பற்றிய தெளிவு ஒன்றாக தானே இருக்க வேண்டும்., ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்கிறார்கள்., கடவுள் என்ன நேரில் வந்து சட்டையை பிடுத்து கேட்க்கவா போகிறார் என்ற தைரியம் தான்.

இது இறை நம்பிக்கைக்காக மட்டும் அல்ல உங்கள் வாழ்க்கையை சிறப்பாக கொண்டு செல்லவும் இந்த பதிவை நீங்கள் கவனமாக கருத்தில் பதிந்திட வேண்டும்

மனிதர்களுள் 3 வகையான நோக்கம் கொண்டவர்கள் உள்ளனர் இந்த வகையினர்களை பற்றி தெரிந்து கொண்டால் தான் உங்களால் சமூகத்தில் பாதிப்பு இன்றி, முக்கியமாக மன கவலை இன்றி வாழ முடியும் மூன்று வகையான நபர்கள் உள்ளனர் என்றால் அடுத்த சந்தேகம் அவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

அதை முடிவில் தெரிந்து கொள்வோம் முதலில் மனிதர்களின் வகைகள் அறிவோமாக

1) எதிர்மறை மனிதர்கள் - Negative Peoples எப்போதும் Negative ஆக பேசுபவர்களை கெட்டவர்கள் என்று என்னாதீர்கள் இதிலும் உட்பிரிவு இரண்டு உள்ளது 1- 1 - சோம்பேறிகள், அதிகம் புறம் பேசுபவர்கள், சதா புலம்பிக்கொண்டே இருப்பவர்கள் மற்றும் இலக்குகள் இல்லாதவர்கள் இவர்களேல்லாம் எதிர்மறையாக தான் இருப்பார்கள்.

1 -2 - உங்கள் மேல் அக்கரை கொண்டவர்களும் எதிர்மறையாக தான் பேசுவார்கள்., உங்களுக்கு ஏதும் தீங்கு நடந்து விடுமோ என்ற பயத்தில்., இதை செய்ய வேண்டாம் அதை செய்ய வேண்டாம் என தடுப்பார்கள் அதற்காக அவர்களை ஒதுக்கி விடாதீர்கள் அது உங்கள் மேல் இருக்கும் அக்கரை தான் என புரிந்து கொள்ள வேண்டும்

2) நேர்மறை மனிதர்கள் - Positive People இதிலும் இரண்டு பிரிவினர் உள்ளனர் 2 - 1 - பெரும்பாலும் அதிகம் பேசாதவர்கள்., ஏதும் பேசினால் உங்கள் குறைகளை சுட்டி காட்டுபவர்கள், தேவையான தகவல்களை குறிப்பால் உணர்த்துபவர்கள்.

உங்களுடன் பழகுபவர்கள் எப்படிப்பட்டவர்கள்? | Who Is The Good Person

நாசுக்காக பேசுபவர்கள் இந்த தகுதி சிறந்த குருவுக்கு மட்டுமே உண்டு 2 - 2 - இவர்கள் தனது கருத்துக்களில் நேர்மறை தன்மை கொண்டவர்கள், நல்ல வார்த்தைகள்,புதிய சிந்தனைகள் இவர்களிடம் பிறக்கும்.

தவறுகள் நேர்ந்தாலும் அதனை இலகுவாக கையாளும் நபர்கள்., இவர்களுடன் பணியாற்றும் போது அதிக அளவு நெருக்கடிகள் வராது.

ஜாதக தோஷங்கள் விலக ஆடி செவ்வாய் அன்று வீட்டில் இதை செய்யுங்கள்

ஜாதக தோஷங்கள் விலக ஆடி செவ்வாய் அன்று வீட்டில் இதை செய்யுங்கள்


அப்படி சிரமம் ஏதும் இருப்பின் அதனை அவர்களே ஏற்றுக்கொள்வர். 3 - நஞ்சு மனதினர் - Toxic Persons அதிகம் positive ஆக பேசுவார்கள், எதை கேட்டாலும் அதற்கு ஒரு பதில் தயாராக வைத்து இருப்பார்கள்., சில நேரத்தில் எச்சரிக்கவும் செய்வார்கள், அன்பாகவும் இருப்பார்கள், ஆறுதலாக பேசுவார்கள்.

ஆனால் இவர்கள் எது செய்தாலும் அது அவர்கள் நம்மைக்காக மட்டும் தான் இருக்குமே தவிற உங்களுக்காக இருக்காது.

அதுமுலாமாக உங்களுக்கு லாபம் இருந்தாலும் அது நெல்லுக்கு பாயும் நீர் கொஞ்சம் வேளிக்கும் போகட்டும் என்பது போல உங்களை பயன்படுத்தி கொள்வார்கள்.

உங்களுடன் பழகுபவர்கள் எப்படிப்பட்டவர்கள்? | Who Is The Good Person

அதற்காக சில தியாகங்கள் செய்யவும் துணிவர்கள், அவர்களின் தேவை முடிந்ததும் தானாக விலகி விடுவார்கள் அதற்குள் நீங்கள் அதல பாத்தாளம் சென்றுவிடுவீர்கள்.

உலகில் உள்ள அணைத்து மனிதர்களும் இந்த 3 வகைப்பாட்டில் அடங்குவர் இப்போது முக்கியமான கட்டம் இவர்களை எப்படி கண்டுபிடிப்பது இவர்களுடைய செயல்கள் மற்றும் அணுகுமுறை கொண்டு கண்டுபிடிக்கலாம்.

உங்களுடன் பழகுபவர்களை எடை போட்டு பாருங்கள் அவர்கள் இதற்க்கு முன் எப்படி இருந்தார்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் பழகும் முறையில் ஏதும் மாற்றங்கள் உள்ளனவா? என அலசி பார்க்க வேண்டும்.

குறுகிய நாளில் ஒருவரை பற்றின அபிமானத்திற்க்கு வர கூடாது, நீண்ட கால அபிமானமும் பயன் படாது.

அவர்களின் செயல்களும் அதில் உள் அடங்கி இருக்கும் பலன்களும் அவர்கள் யார் எப்படி பட்டவர்கள் என அறுதியிட்டு காட்டும் உங்களை இதை செய் அதை செய் என யாரேனும் கட்டளையோ கோரிக்கையோ விண்ணப்பமோ யாசகமோ கேட்டால் அதை செய்வதால் நமக்கும் அவருக்கும் என்ன நடக்கும் என சற்று சிந்தியுங்கள் உணர்ச்சி வசப்படாமல் அறிவை பயன் படுத்துங்கள்.

அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு தான் ஆனால் அறிவால் உணர்ச்சியை வெல்வதே உயர்வு

வாழ்க வளமுடன்  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US