கிருஷ்ண பகவானையே கட்டிப்போட்ட ருக்மணியின் அந்த கேள்வி என்ன?

By Sakthi Raj Aug 09, 2026 01:00 PM GMT
Report

துவாரகையில் ஒரு நாள் நாரத முனிவர் கிருஷ்ண பகவானை சந்திக்க வருகிறார். வழக்கம்போல் கிருஷ்ண பகவானுடைய லீலைகளை பாடி மகிழ்ந்த அவர் ருக்மணி தேவியிடம் ஒரு கேள்வி கேட்கிறார். தாயே உலகம் முழுவதும் பகவான் கிருஷ்ணர் உடைய பக்தர்கள் கோடிக்கணக்கான இருக்கிறார்கள்.

ஆனால், அவர்களில் யார் பகவானுக்கு மிகவும் பிரியமானவர் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் என்று கேட்கிறார். புன்னகையுடன் ருக்மணி பகவான் எல்லோரிடமும் சமமாக அன்பு செலுத்தக் கூடியவர். இருந்தாலும் பாண்டவர்கள் மீது அவருக்கு தனி அன்பும் பாசமும் இருப்பதை நான் உணர்கிறேன் என்று கூறுகிறார்.

கிருஷ்ண பகவானையே கட்டிப்போட்ட ருக்மணியின் அந்த கேள்வி என்ன? | Who Is True Lord Krishna Devotee

பாண்டவர்களின் அஸ்வமேத யாகத்தையே மிஞ்சிய ஏழை குடும்பத்தின் தியாகம்

பாண்டவர்களின் அஸ்வமேத யாகத்தையே மிஞ்சிய ஏழை குடும்பத்தின் தியாகம்

நாரதர் சிரித்தபடி அப்படி என்றால் ஒரு சிறிய சோதனை செய்து பார்க்கலாமா என்கிறார். அதற்கு ருக்குமணியும் சம்மதம் தெரிவிக்கிறார். பிறகு சில தினங்கள் கழித்து கிருஷ்ணர் பகவான் திடீரென கடுமையான வயிற்று வலியால் துடிப்பது போல நடிக்க துவங்குகிறார்.

துவாரகை முழுவதும் பரபரப்பு ஏற்படுகிறது. அரச வைத்தியர்கள், முனிவர்கள் யாராலும் கிருஷ்ண பகவானுடைய அந்த வயிற்று வலியை போக்க முடியவில்லை. அப்போது நாரதர் இந்த வலிக்கு ஒரே ஒரு மருந்து தான் உள்ளது.

பகவானை நேசிக்கக் கூடிய அந்த ஒரு பக்தரின் பாத தூசியை அவரது தலையில் வைத்தால் மட்டுமே இந்த வலி நீங்கும் என்கிறார். அப்பொழுது, இந்த செய்தி துவாரகை முழுவதும் பரவத் தொடங்குகிறது. ஆனால், யாரும் முன் வரவில்லை.

எங்களுடைய பாத தூசியை பகவானுடைய தலையில் வைப்பதா? இது மிகப்பெரிய பாவம் அல்லவா? நாங்கள் நரகத்திற்கு செல்ல நேரிடும் என்று அவர்கள் பின்வாங்குகிறார்கள். நாரதர் தேவர்களுடமும் முனிவர்களிடமும் பல அரசர்களிடமும் செல்கிறார்.

கிருஷ்ண பகவானையே கட்டிப்போட்ட ருக்மணியின் அந்த கேள்வி என்ன? | Who Is True Lord Krishna Devotee

கருட புராணம்: மரணத்திற்குப் பிறகு ஒரு ஆன்மா எவ்வளவு நாள் வீட்டில் இருக்கும் தெரியுமா ?

கருட புராணம்: மரணத்திற்குப் பிறகு ஒரு ஆன்மா எவ்வளவு நாள் வீட்டில் இருக்கும் தெரியுமா ?

அனைவரும் இதே பதிலை தான் சொல்கிறார்கள். இறுதியாக அவர் விருந்தாவனத்தில் இருந்த கோபிகைகளிடம் செல்கிறார். அவர்கள் கிருஷ்ணருக்கு உடல்நலம் சரியில்லை என்ற செய்தியை கேட்டவுடன் பதறிப் போகிறார்கள். நாரதர் அவர்களிடம் உங்களுடைய பாத தூசியை கிருஷ்ண பகவருடைய தலையில் வைக்க வேண்டும்.

ஆனால், அப்படி செய்தால் நீங்கள் நரகத்திற்கு கூட செல்ல நேரலாம் என்றார். அதை கேட்ட கோபிகைகள் ஒரு கணம் கூட யோசிக்கவில்லை. நாங்கள் நரகத்திற்கு சென்றாலும் பரவாயில்லை. எங்கள் கிருஷ்ண பகவான் நலமோடு இருக்க வேண்டும். அதுவே எங்களுக்கு போதுமானது என்கிறார்கள்.

பிறகு அவர்களுடைய பாத தூசியை ஒரு துணியில் சேகரித்து நாரதர் இடம் கொடுத்தனர். நாரதர் உடனே அதை எடுத்துக்கொண்டு துவாரகைக்குத் திரும்ப, அந்த தூசியை கிருஷ்ணனுடைய தலையில் வைக்கிறார்.

அடுத்த கனமே கிருஷ்ண பகவான் புன்னகையுடன் எழுந்து அமர்ந்து விடுகிறார். அவருடைய வயிற்று வலி மறைந்து விட்டது. அப்போது ருக்மணியும் அங்கிருந்து அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.

கிருஷ்ண பகவானையே கட்டிப்போட்ட ருக்மணியின் அந்த கேள்வி என்ன? | Who Is True Lord Krishna Devotee

கிருஷ்ணர் மெதுவாக சொல்கிறார்" இதுதான் உண்மையான பக்தி". சொர்க்கம், நரகம், புண்ணியம், பாவம் என்று எதையும் பாராமல் தன்னை மறந்து தங்களையே இறைவனுக்கு ஒப்படைக்க கூடிய அந்த வாழ்க்கை தான் பரமபக்தி என்கிறார்.

அப்போது, ருக்மணி கோபிகை களின் பக்தியின் ஆழத்தை உணர்ந்து மனமார்ந்த அவர்களை போற்றுகிறாள். குறிப்பு: இந்த கதை வைணவ பக்தி மரபுகளில் பரவலாக செல்லக்கூடியது மகாபாரதத்தில் முதன்மை உரையில் இடம் பெறுவதில்லை. இது பக்தியை எடுத்துரைக்கும் பாரம்பரிய கதையாகவே கருதப்படுகிறது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US