மனைவியை மதிக்காத ஆண் ராசிகள் - உங்க கணவர் ராசி என்ன?
ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்த ஆண்கள் தங்கள் காதலி/மனைவியை ஒருபோதும் மதிக்க மாட்டார்கள். தங்கள் துணையை தீவிரமாக நேசித்தாலும் தங்களின் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படும் போது நிச்சயமாக அந்த உறைவைத் தொடர விரும்ப மாட்டார்கள்.

மேஷம்
அனைத்தையும் விட தங்களின் லட்சியங்களும், விருப்பங்களும்தான் முக்கியம், அவர்களுக்கு காதல் கூட இரண்டாம் பட்சம்தான். இது தங்கள் துணைகளுக்குத் தேவையான ஆதரவையும், அவர்கள் எதிர்பார்க்கும் மரியாதையையும் வழங்காத போக்கிற்கு வழிவகுக்கும்.
தனுசு
சுதந்திரம் மற்றும் புதிய விஷயங்களை ஆராய்வதில் அவர்களுக்குள்ள ஆர்வம், அவர்களின் துணைக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவத்தையும், மரியாதையும் புறக்கணிக்கக்கூடும். தங்கள் துணைகளுக்கு மிகவும் தேவைப்படும் நேரங்களில் அவர்கள் எப்போதும் உடனிருக்க மாட்டார்கள்.
மகரம்
ஆண்கள் தங்கள் தொழில் இலக்குகளுக்கு அதிக முன்னுரிமை அளித்து, தங்களுக்கு நெருக்கமானவர்களின் தேவைகளைப் புறக்கணிக்கலாம். இதன் விளைவாக, அவர்கள் தங்கள் காதலி, மனைவியை மதிக்காத ராசிகளில் ஒன்றாக அவர்களுக்கேத் தெரியாமல் மாறிவிடுவார்கள்.
கும்பம்
தங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்கோ அல்லது வெளிப்படுத்துவதற்கோ சிரமப்படலாம், இது தேவைப்படும் நேரங்களில் அவர்களின் துணையை ஆதரவற்றவர்களாவும், முக்கியத்துவம் இல்லாதவர்களாகவும் உணரச் செய்யலாம்.