மீன ராசியினருக்கு உதவும் உறவுகள் யார்? உதறி செல்லும் உறவுகள் யார்?

By Sakthi Raj Sep 05, 2026 11:45 AM GMT
Report

  ஜோதிடத்தில் 12 வது ராசியான மீன ராசியினர் குரு பகவானின் ஆதிக்கத்தை கொண்டவர்கள். இவர்களுக்கு நான்காம் இடத்து அதிபதி புதன் என்பதால் அம்மாவால் எப்பொழுதும் மகிழ்ச்சி இவர்களுக்கு நினைத்தது போல் கிடைப்பது இல்லை.

இருப்பினும் புனர்பூச நட்சத்திரம் கொண்ட தாய்மார்கள் ஒரு நல்ல ஆதரவை கொடுப்பார்கள். ஒன்பதாம் இடத்து அதிபதி விருச்சிக ராசி என்பதால் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த தந்தை மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் உதவியாக இருக்க கூடியவர்கள்.

மற்ற நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் சில கருத்து வேறுபாடுகளை இவர் சந்திக்கிறார்கள். மேலும், இவர்களுக்கு உடன் பிறந்தவர்களால் மிகப்பெரிய அளவில் நன்மைகள் கிடைப்பதில்லை.

புதுமனை குடி போகும் பொழுது ஏன் இந்த 2 பொருட்கள் அவசியம் தெரியுமா?

புதுமனை குடி போகும் பொழுது ஏன் இந்த 2 பொருட்கள் அவசியம் தெரியுமா?

ஆனால், உடன் பிறந்தவர்கள் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்து இருந்தால் ஒரு நல்ல ஆதரவு கிடைக்கும்.

ஆனால், மீன ராசியை பொறுத்த வரை அவர்கள் வாழ்க்கையில் தாய் மாமனுடைய பங்கு மிகப் பெரிய அளவில் இருக்கும். இருந்தாலும் காலப்போக்கில் இவர்களுடைய பிணைப்பில் ஒரு விரிசல் உண்டாகிவிடும்.

மீன ராசிக்கு 11ஆம் இடத்து அதிபதி சனி பகவான் என்பதால் மாமனார் மிகவும் கண்டிப்பானவராக இருப்பார். திருவோண நட்சத்திர மாமனார் ஒரு நல்ல வழிகாட்டியாகவும் மீன ராசியினருக்கு ஏழாம் இடத்திற்கு புதன் அதிபதியாக இருப்பதால் திருமண வாழ்க்கை ஆரம்ப காலத்தில் சவால்களை சந்திக்கலாம்.

பிற்காலத்தில் நிலையான தன்மையை பெறும். மேலும், மீன ராசியினருக்கு தங்களுடைய வாழ்க்கையில் உதவும் உறவுகள் யார்? உதறி செல்லும் உறவுகள் யார் என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US