திருமணத்திற்கு பிறகு யாருக்கு சொகுசு வாழ்க்கை அமையும்?
ஜோதிட ரீதியாக நாம் நிறைய விஷயங்களை கிரகங்களை வைத்து கணித்துக் கொள்ள முடியும். அந்த வகையில், எந்த ஜாதகருக்கு திருமணத்திற்கு பிறகு மிகப்பெரிய செல்வமும் யோகமும் ஆடம்பரமான வாழ்க்கை வாழக்கூடிய அமைப்பு உண்டாகும் என்பதை பற்றி பார்ப்போம்.
கணவன் மனைவியினுடைய ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம் அதிபதி சுக்கிரன் ஆகவும் அல்லது சுக்கிரன் குரு இருவருடன் இணைந்து லக்னத்திற்கு 4,7, 11 12 ஆகிய வீடுகளில் இருந்து அவை ரிஷபம், கடகம், துலாம், மீனம் ஆகிய வீடாக இருந்தால் நிச்சயமாக அவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி இருவருமாக சொகுசு மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதற்கான நிலை அமையும்.

இவர்களுக்கு வசதிகளும் சௌகரியம் எல்லாம் கிடைக்கும். கணவன் அல்லது மனைவியின் மகிழ்ச்சிக்காக இவர்கள் பெரிய அளவில் செலவு செய்யக்கூடிய அமைப்பு உருவாகும்.
இவர்களுக்கு எந்த நிலையிலும் பொருளாதார தட்டுப்பாடு என்பது கட்டாயமாக இருக்காது. பொருளாதாரத்தில் எப்பொழுதும் உயர்ந்த நிலையும் கஷ்டங்களையும் எளிதில் சமாளிக்க கூடிய அமைப்பையும் பெறுவார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |