ஸ்ரீ ராமஜெயம் முதலில் எழுதியது யார் தெரியுமா ??
மனம் உடைந்து போனால் வாழ்க்கையில் தோல்வி அடைந்தால் முதலில் நம் மனம் தேடுவது இறைவனை.
மேலும் எண்ணியதை நிறைவேற்ற பலரும் ராமரை மனதில் நினைத்து கொண்டு ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவதுண்டு.
அப்படியாக ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவதால் நம் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடக்கிறது.ஒருவர் ராமரை நினைத்து ராம ஜெயம் எழுதுவதால் அவர்கள் வாழ்க்கையில் உள்ள துன்பம் விலகி இன்பம் பிறக்கிறது.
இருப்பினும் ஸ்ரீ ராம ஜெயம் முதலில் எழுதியது யார் தெரியுமா?அதை பற்றி பார்ப்போம்
போரில் ராவணனை வீழ்த்தினார் ராமர்.இந்த நல்ல செய்தியை யார் சீதையிடம் சென்றுக்கூறுவது என்று ராமர் யோசித்த பொழுது, நான் நீ என்று பலர் முன்வந்தார்கள்.
ஆனால் ராமரோ ஆஞ்சநேயர் தான் இதற்குச் சரியான நபர் என்று அனுமனிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார்.
ராமரின் ஆணையை ஏற்றுக்கொண்டு சீதையின் இருப்பிடத்திற்கு வந்த ஆஞ்சநேயருக்கு சீதையை பார்த்தவுடன் சந்தோஷ மிகுதியால் பேச முடியவில்லை. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.
இதைக் கண்ட சீதைக்கோ ஏன் அனுமனின் கண்களில் கண்ணீர் என்ற கவலை. இதை சட்டென்று புரிந்துகொண்ட அனுமன்,சந்தோஷத்தில் வாய் பேச முடியவில்லை என்றால் என்ன ?
ராமர் வெற்றி பெற்ற நற்செய்தியை எழுதி காண்பிக்கலாமே என்று “ஸ்ரீ ராமஜெயம்” என்று மண்ணில் எழுத அதைப்படித்த சீதாப்பிராட்டியாரும் செய்தியறிந்து சந்தோஷமடைந்தார்..!!
அதுவே “ஸ்ரீராமஜெயம்” அனைவரும் எழுத காரணமாயிற்று…!!! ஆக ஒருவர் ஸ்ரீ ராம ஜெயம் எழுத கண்டிப்பாக வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நடக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |