யாருடைய சாபத்திற்கு அதிக சக்தி உள்ளது? சாஸ்திரம் சொல்வது என்ன?
சாபம் என்பது ஒருவர் தீங்கு விளைவிக்கின்ற பொழுது அதை அல்லது கோபத்தை ஏற்படுத்துகின்ற பொழுது அல்லது நமக்கு ஏற்றவாறு அவர்கள் நடக்காத பொழுது நம் மனமானது நொந்து ஒருவருக்கு ஒரு சாபத்தை வழங்குகிறது.
இது சில நேரங்களில் மனவலியால் ஒருவருக்கு கொடுக்கக்கூடிய சாபமாக இருந்தாலும் சில நேரங்களில் ஒருவர் வெறும் கோபத்தின் வெளிப்பாடாக அவர்களுடைய சாபத்தை கொடுக்கிறார்.
இருப்பினும் அவர்கள் கோபமாக இருந்தாலும் மனம் நொந்து அந்த கோபம் வெளிப்பட்டால் நிச்சயமாக அந்த சாபமும் பலித்து விடும் என்று சொல்கிறார்கள்.
அதனால், முடிந்தவரை நாம் எவருடைய மனமும் துன்பப்படாமல் வாழ்ந்து விடுவது அவசியம். இந்த உலகத்தில் ஒருவரின் நேரம் சரி இல்லை என்றால் அவர்களால் பாவம் என்பது நிறுத்தப்படாமல் நடந்தேற கூடிய ஒரு நிகழ்வாகும்.

இறுதியில் அவர்கள் நிம்மதியாக அமரும் முன் அதற்கான முழு பலனை பிரபஞ்சம் கொடுத்து விடும். ஆனால் அதிலிருந்து விடுதலை பெறுவது என்பது எத்தனை ஜென்மங்கள் கடக்கும் என்பதை நாம் கட்டாயம் அறிய மாட்டோம்.
ஆதலால் பிறர் நமக்கு தீங்கு செய்ய முயன்றாலும் நாம் நம்முடைய பாதையில் சரியாக நடக்கின்ற பொழுது இறைவன் துன்பத்திலும் நமக்கு இறுதியில் இன்பத்தை வழங்குவார்.
வாழ்கின்ற இந்த சிறிய காலங்களில் தாயாக, தந்தையாக, சகோதரனாக, சகோதரியாக மனைவியாக, கணவனாக, குழந்தைகளாக இறைவனால் விதிக்கப்பட்ட உறவுகளிடம் நாம் அன்பு பாராட்டி யாருடைய மனதையும் புண்படுத்தாமல் அவர்களுடைய மன வலியின் உச்சக்கட்டத்திற்கு அவர்கள் சென்ற சாபம் விடும் அளவிற்கு நாம் ஒரு அமைப்பை உருவாக்காமல் வாழ்வது அவசியமாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |