2025 மஹாசிவராத்திரி ஏன் சக்தி வாய்ந்ததாக சொல்லப்படுகிறது?
தமிழ் மாதம் பன்னிரண்டு மாதத்தில் மாசி மகத்தில் வரும் மகாசிவராத்திரி மிகவும் விஷேசமானவை.அன்றைய நாளில் நாம் இறைவழிபாடு செய்து சிவபெருமானை வணங்கிட நமக்கு எண்ணற்ற பலன்கள் கிடைக்கிறது.அதிலும் இந்த வருடம் 2025 பிப்ரவரியில் வரும் மஹாசிவராத்திரி மிகவும் விஷேசமான சக்தி வாய்ந்த மஹாசிவராத்திரியாக கருதப்படுகிறது.அதை பற்றி பார்ப்போம்.
அதாவது நம்முடைய இந்து மதத்தில் படைப்புக்கு பிரம்மா காத்தலுக்கு விஷ்ணு அழித்தல் சிவன் என்று நாம் சொல்வது உண்டு.அழித்தல் கடவுள் என்று சிவபெருமானை குறிப்பிட காரணம் அவர் நம்முடைய அகந்தை,ஆணவம்,கர்மவினைகள் இவை எல்லாம் அழித்து முக்தி கொடுக்கிறார்.
அப்படியாக,சிவபெருமானுக்கே உரிய மஹாசிவராத்திரி அன்று தியானம் செய்து சிவவழிபாட்டில் ஈடுபடும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாறுதல்களை சந்திக்கமுடியும்.சிவ வழிபாட்டில் ஈடுபடுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.
அனைவராலும் சிவநாமம் சொல்லி சிவபெருமானை வணங்கிட முடியாது.எவர் ஒருவருக்கு சிவ நாமம் சொல்லி வழிபட முடிகிறதோ அவர்கள் பெரும் பாக்கியம் செய்தவர்கள்.அதிலும் 2025 வரும் மஹாசிவராத்திரி 30 வருடங்களுக்கு பின் வரும் சூட்சும இரவு இரவு என்று சொல்லப்படுகிறது.
அதாவது,கும்பத்தில் சூரியன் சனி சேர்ந்த இந்த மகா சிவராத்திரி முப்பது வருடங்களுக்கு பின் வருகிறது . சனி கும்பம் வர முப்பது வருடங்கள் ஆகும்.இந்த நாளில் கட்டாயம் சிவன் ஆலயம் சென்று வழிபாடு செய்திட நம்முடைய தடைகள் எல்லாம் விலகி முன்னேற்றம் பெற முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |