கைகளில் கயிறு கட்டுவதால் இத்தனை நன்மைகள் இருக்கிறதா?
நாம் அனைவரும் கோவில்களுக்கு சென்றால் அங்கு கொடுக்கப்படும் கயிறுகளை வாங்கி கைகளில் கட்டிக் கொள்ள விரும்புவோம். மேலும் சிலர் அவர்களுக்கு உரிய அதிர்ஷட நிறமான கயிறுகளை சுவாமியின் பாதங்களில் வைத்து அதை அவர்கள் கட்டிக் கொள்வார்கள்.
இவ்வாறு கைகளில் கயிறு கட்டிக் கொள்வதற்கு பின்னால் பல நன்மைகள் இருக்கிறது. இவை நமக்கு ஒரு வித நேர்மறை சக்திகளை கொடுத்து எதிர்மறை சக்திகளிடமிருந்து நம்மை காப்பாற்றுகிறது.
மேலும் நம் மனதில் ஏதேனும் ஒரு முக்கிய காரியத்தை நினைத்து அது நிறைவேற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு 48 நாட்கள் நாம் சுவாமியின் பாதங்களில் வைத்த கயிறுகளை கையில் கட்டிக் கொள்வதால் அவை விரைவில் நடக்கும் என்பதும் ஒரு நம்பிக்கையாக இருக்கிறது.
இவ்வாறு கைகளில் கயிறு கட்டுவதற்கு பின்னால் இருக்கும் பல நன்மைகளைப் பற்றி நமக்கு விளக்கமாக எடுத்துக் கூறுகிறார் பாலாறு வேலாயுதம் சுவாமிகள் அவர்கள். அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







