திருப்பதிக்கு தரிசனம் செல்லும் பெண்கள் தலையில் பூ வைக்கக்கூடாதாம்- காரணம் தெரியுமா?
வைணவத்திருத்தலங்களில் மிக முக்கியமான திருத்தலமாக திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளது. அப்படியாக, இங்கு சுவாமியை தரிசிக்க செல்லும் பெண்கள் தலையில் பூ வைக்க அனுமதி இல்லை என்று சொல்லப்படுகிறது. அதன் உண்மை காரணம் என்னவென்று பார்ப்போம்.
கலியுக வரதனாக அவதாரம் எடுக்க காத்திருக்கும் திருப்பதி வெங்கடேஸ்வரா சுவாமியை தரிசனம் செய்ய பல்வேறு ஊர்களில் இருந்தும் நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றார்கள். அந்த வகையில் இங்கு சுவாமியை தரிசிக்க செல்லும் பெண்கள் கட்டாயம் தலையில் பூக்கள் வைப்பது இல்லையாம்.
அவ்வாறு யாரேனும் தெரியாமல் தலையில் பூக்கள் வைத்து சென்றால் அவர்களின் பூக்களை செக்போஸ்ட்டில் அகற்றிய பின்னர் அவர்களை சுவாமி தரிசனம் செய்ய அனுப்புகிறார்கள். இதற்கு பின்னால் ஒரு முக்கிய காரணம் இருப்பதாக சொல்கிறார்கள்.
அதாவது, இந்து மதத்தில் விஷ்ணு பகவான் அலங்கார பிரியராக இருக்கிறார், அதுவே சிவபெருமானை எடுத்துக்கொண்டால் அவர் அபிஷேக பிரியராக இருக்கிறார். அதேப்போல் வெங்கடேஸ்வர சுவாமி பூக்கள் பிரியராக இருக்கிறார்.
இங்கு சுவாமிக்கு பிரம்மோற்சவத்தின் போது பல்லாயிரம் வகையான மலர்கள் கொண்டு புஷ்பம் சாதிக்கப்படும். மேலும், திருமலை மலர் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
திருமால் இத்தனை மலர் பிரியராக இருப்பதால் பக்தர்கள் அன்பின் வெளிப்பாடாக திருமலையில் பூக்கும் பூக்கள் அனைத்தையும் பெருமாளுக்கே சாற்றி வழிபாடு செய்யவேண்டும் என்று எண்ணுகிறார்கள்.
ஆக பெரும்பாலான பக்தர்கள் இதனை அறிந்து தலையில் பூக்கள் வைத்துக்கொள்ளாமலே தரிசனம் செய்ய வருகை தருகிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







