2025 வரலட்சுமி விரதம்: செல்வம் பெருக நாம் சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த 9 மந்திரங்கள்
விரதங்களில் மிகவும் முக்கியமான விரதமாக வரலட்சுமி விரதம் இருக்கின்றது. அன்றைய நாளில் பல பெண்கள் தங்கள் குடும்ப நலனுக்காக விரதம் இருந்து வழிபாடு மேற்கொள்வார்கள். அப்படியாக, இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் வருகின்றன ஆகஸ்ட் 08 ஆம் தேதி வருகின்றது.
அன்றைய நாளில் நாம் முறையாக விரதம் இருந்து மஹாலட்சுமி தாயாருக்கு பூஜை செய்து வழிபாடு செய்தால் நம் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களும், பொருளாதார சிக்கல்களும் விலகும்.
அதோடு, நாளை வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்தால் வீடுகளில் சந்திக்கும் கடன் சுமை விலகி செல்வம் பெருகும். அந்த வகையில் நாளை வழிபாடு செய்யும் பொழுது சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த 9 மந்திரங்களை பற்றி பார்ப்போம்.
1. "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகாலட்ச்மியே நமஹ"
2. "ஓம் ஸ்ரீம் மகாலட்சுமியே ச வித்மஹி விஷ்ணு பத்னீச தீமஹி தன்னோ லட்சுமி ப்ரசோதயாத்"
3. "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஐஸ்வர்ய லட்சுமியே நமஹ"
4. "ஓம் ஸ்ரீம் நமஹ"
5. "ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் லக்ஷ்மிபயோ நமஹ"
6. "ஓம் ஸ்ரீம் க்ரீம் க்லீம் ஸ்ரீ சித்த லட்சுமி குபேராய நமஹ"
7. "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீயே நமஹ"
8. "ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் மகாலட்சுமியே நமஹ"
9. இதோடு, ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்தால் வீடுகளில் பண செழிப்பு குறைவில்லாமல் இருக்கும்.
எப்பொழுதும், மந்திரங்கள் அதிக அளவில் சக்திகள் கொண்டது. அதனால் அந்த மந்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது மனதில் நமக்கு தேவையான வேண்டுதல்கள் வைத்து அதை சொல்லி வழிபாடு செய்ய நினைத்த காரியத்தை விரைவில் அடைய வழி பிறக்கும்.
ஆக, நாளை மிக சிறந்த நாளான வரலட்சுமி விரத நாளில் மேற்கண்ட மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்து நாமும் நம் நினைத்த விஷயங்களை அடைந்து மகிழ்ச்சி பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







