இறைவனிடம் மனிதன் கேட்ட 6 தர்மசங்கடமான கேள்விகள்.. என்ன தெரியுமா?
பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் இருக்கும். நாம் யார் இந்த பிறவி எதற்கு? இந்த உலகத்தில் ஏன் சில விஷயங்களை நாம் புரிந்து கொள்ளவே முடிவதில்லை என்று பல கேள்விகள் எழும். அந்த வகையில் ஒரு முறை மனிதன் கடவுளை பார்த்து 6 தர்மசங்கடமான கேள்விகள் கேட்கிறான்.
அதாவது இந்த உலகம் ஒரு மாயையாக இருந்தாலும் அதில் விடை தெரியாத பல மர்மங்களும் நிறைந்து இருக்கிறது. இந்த மர்மங்களால் என் மனதில் ஒரு ஆறு கேள்விகள் உள்ளது அதனுடைய சந்தேகத்தை தீர்த்து வைக்க முடியுமா? என்று அவன் கடவுளை பார்த்து கேட்கிறான் கடவுளும் சிரித்துக் கொண்டே சரி கேளு என்று சொல்கிறார்.

அப்படியாக, அவன் அவனுடைய கேள்விகளை அடுக்கடுக்காக எடுத்து வைக்கின்றான். அதன் முதல் கேள்வி எந்த ஒரு தீய பழக்கமும் இல்லாத மனிதன் திடீரென்று மரணம் அடைந்து விடுகிறானே எதற்காக?
இரண்டாவது கேள்வியாக அவன் கேட்கிறான் யாருடைய மனதையும் புண்படுத்த நினைக்காத ஒரு மனிதனை எல்லாரும் சேர்ந்து காயப்படுத்துகிறார்களே ஏன்?
மூன்றாவது கேள்வியாக காதல் மற்றும் நண்பர்கள் இவற்றில் அதிக அன்பை காட்டுபவர்கள் இறுதியில் தனிமையாக விடப்படுகிறது ஏன்?
நான்காவது கேள்வியாக சிக்கனமாக இருப்பவர்கள் நலிவடைந்து பொருளாதாரத்தில் வறுமையில் வாழ்வது எதற்கு?
ஐந்தாவது கேள்வியாக பிறருக்கு உதவ வேண்டும் என நினைக்கும் நல்ல மனதுடைய மனிதன் எதற்காக அதிகம் ஏமாற்றப்படுகிறார்?
ஆறாவது கேள்வி ஆணவம் கொண்டவர்கள் பிறரின் சொத்தை அபகரிப்பவர்கள் மற்றும் அநீதிக்கு துணை போகின்றவர்கள் எல்லோரும் அதிக செல்வத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களே அது ஏன்?என்று ஆறு கேள்விகள் அவன் கடவுளை பார்த்து கேட்கின்றான்.

அதற்கு கடவுள் சிரித்துக்கொண்டே கூறுகிறார். மானிடா ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் என இரண்டு வகையாக நாம் பிரிக்கலாம்.
அதில் நல்லவர்கள் பூமியில் வாழும் காலத்தில் செல்வம் இன்றி அன்பின்றி தனிமையில் வாழ இறுதியில் அவர்கள் என் திருவடியைச் சரணடைந்து முக்தி அடைந்து விடுகிறார்கள்.
ஆனால் தீயவர்கள் பணம் பொருள் மற்றும் தான் என்ற அகங்காரம் போன்ற உலகின் மாயைகளில் சிக்கி என்னை சரண் அடையாமல் மீண்டும் மீண்டும் மறுபிறவி எடுத்து பல துன்பங்களை அனுபவிப்பார்கள் என இறைவன் கூறினார்.
அப்பொழுதுதான் மனிதன் புரிந்து கொண்டான் நல்லவர்கள் வாழும் காலத்தில் துன்பப்பட்டாலும் இறுதியில் அவர்களுக்கு மோட்சம் என்கின்ற அற்புதமான மகிழ்ச்சி இறைவன் திருவடியில் கிடைக்கிறது என்று உணர்ந்து "ஹரி ஓம்" என்று நாராயணனை சரண் அடைந்தான். அதோடு உலகத்தின் உண்மை நிலையில் உணர்ந்துக் கொண்டான்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |