இடது கையால் தானம் செய்த கர்ணன்-தட்டி கேட்ட நண்பன்
கொடை வள்ளல் என்றால் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது கர்ணன் தான்.கர்ணன் போல் இந்த உலகில் யாரும் தானம் செய்யவும் முடியாது அவரை போல் வாழ்ந்து காட்டவும் முடியாது.கர்ணன் செய்த தானத்திற்கு அளவே இல்லை.
இந்த காலத்தில் மனிதர்கள் சொந்த ரத்த உறவிற்கே முடிந்த உதவியை செய்ய தயங்கும் பொழுது கர்ணன் கேட்டவர்களுக்கு எல்லாம் இல்லை என்று சொல்லாமல் தானம் செய்து வந்தான்.அதனால் தான் போர்க்களத்தில் உயிர் பிரியும் நேரத்திலும் அவன் செய்த தானம் அவனை காத்து நின்று கொண்டு இருந்தது.
ஆனால் இதை பார்த்து கொண்டு இருந்த "கண்ணன்"கர்ணனிடம் நீ செய்த தர்மம் எல்லாம் எனக்கு தந்து விடு எஎன்று சொல்ல மார்பில் புதைந்த அம்பை எடுத்துக் கொட்டும் செங்குருதியில் அவன் செய்த தர்மத்தின் பலன் யாவையும் கண்ணனுக்கு அர்ப்பணித்தான்.
இது அல்லவா கொடை.கேட்டவர்களுக்கு இல்லை என்று இறக்கும் தருவாயிலும் இருந்த குணம் தான் மனிதன் பெற வேண்டும். நாம் பொதுவாக யாருக்கு எதை தானமாக கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் வலது கையால் தான் கொடுப்போம்.
ஆனால் கர்ணன் ஒருமுறை அவனிடம் தானம் என்று கேட்டு வந்தவர்களுக்கு இடது கையால் தானம் செய்கிறார்.அதாவது ஒரு நாள் கர்ணன் கிணற்று அடியில் இடது கையில் ஒரு கிணத்தில் எண்ணெய் வைத்து கொண்டு உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளித்து கொண்டு இருந்தார்.
அப்பொழுது அந்த பக்கமாக வந்த ஒரு ஏழை நபர்.கர்ணனிடம் ஐயா எனக்கு ஏதேனும் முடிந்ததை கொடுத்து உதவுங்கள் என்று கேட்க,அவர் கேட்ட நொடியிலே கர்ணன் அவர் இடது கையில் இருந்த கிண்ணத்தை கொடுக்கிறார்.
இதை பார்த்து கொண்டு இருந்த நண்பர் கர்ணனிடம் கேட்கிறார். கர்ணா உன்னை போல் கொடுத்து உதவும் வள்ளல் யாரும் இல்லை.ஆனால் தானம் கொடுக்கவேண்டும் என்றால் வலது கையால் தானே கொடுப்பார்கள்.
நீங்கள் இடது கையால் கொடுத்தீர்களே அது முறையாகுமா என்று கேட்கிறார். அதற்கு கர்ணன் சிரித்துகொண்டே ஆம் நீங்கள் சொல்வது சரிதான்.வாழ்க்கையில் அடுத்து நமக்கு என்ன நடக்கும் என்று எதுவும் முன் எச்சிரிக்கை கொடுப்பதில்லை.
நான் கிண்ணத்தை வலது கை மாற்றும் முன் என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.ஆகையால் தான் அவர் கேட்ட மாத்திரம் நான் தானம் கொடுத்துவிட்டேன்.ஒருவர் கேட்டு உடனே நாம் செய்வது பெயர் தான் தானம் என்று சொல்ல அந்த நண்பர் வியப்பில் ஆழ்ந்தார்.
கர்ணனை போல் வாழ இனி யார் எத்தனை பிறப்பெடுத்தாலும் முடியாது போல் வாழ்ந்து காண்பித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்து இருக்கிறார் கர்ணன்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |