குலதெய்வம் அருள் பெற இன்று அமாவாசை அன்று வீட்டில் செய்யவேண்டிய பரிகாரம்
ஒரு மனிதனுக்கு குல தெய்வத்தின் அருள் மிகவும் முக்கியம்.குல தெய்வத்தின் அருள் இருந்தால் தான் அவன் வாழ்க்கையில் பிற தெய்வங்களுடைய அருளை பெற முடியும்.நமக்கு குல தெய்வத்தின் துணை இருந்தால் போதும் வாழ்க்கையில் அடுத்து அடுத்து வெற்றிகள் பெறலாம்.
குல தெய்வம் கண் பார்வை இருந்தால் போதும் அவர்கள் குடும்பம் செழித்து வளமாக வாழும்.இவ்வளவு சக்தி வாய்ந்த குல தெய்வத்தின் அருளை பெற கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினத்தன்று செய்ய பல நன்மைகள் நடக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.
இந்த வழிபாட்டை இன்று 30.11.2024 சனிக்கிழமை அன்று மாலை 5 30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் செய்ய வேண்டும்.இந்த வழிபாட்டை நாம் வீட்டில் இருந் படியே செய்யலாம்.இதற்கு நம் வீட்டில் பூஜை அறையில் ஒரு இடத்தை சுத்தம் செய்து பச்சரிசி மாவினால் கோலம் போட வேண்டும்.
அதற்கு மேல் ஒரு வாழை இலை அல்லது தட்டை வைத்து அதற்கு மேல் குங்குமத்தை கொட்டி பரப்பிக் கொள்ளுங்கள். அந்த குங்குமத்திற்கு மேல் புள்ளிகள் இல்லாத நல்ல எலுமிச்சம் பழமாக பார்த்து ஒரு எலுமிச்சம் பழத்தை வைக்க வேண்டும்.
இந்த எலுமிச்சம் பழத்தை குல தெய்வத்தை குல தெய்வமாக எண்ணி கொள்ள வேண்டும்.மேலும்,குலதெய்வத்திற்கு நெய்வேத்தியமாக வடித்த பச்சரிசி சாதத்தில் நெய் அல்லது தேன் கலந்து வைக்க வேண்டும்.
ஒரு கைப்பிடி அளவு வைத்தால் கூட போதும். பிறகு ஒரு அகல் விளக்கில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும்.இதோடு அருகில் ஒரு சொம்பில் தண்ணீரை நிரப்பி வைத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்த பிறகு குல தெய்வத்தை மனதார நினைத்து கொள்ளவேண்டும்.பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.பிறகு நாம் சொம்பில் வாய்த்த தண்ணீரை வீட்டில் உள்ளவர்கள் குடிக்க வேண்டும்.
நாம் குல தெய்வமாக வைத்த எலுமிச்சை பலத்தை இரவு முழுவதும் அதுலயே வைத்து விட வேண்டும். பிறகு மறு நாள் காலையில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி அந்த எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து வீட்டில் உள்ளவர்கள் குடிக்க வேண்டும்.
இவ்வாறு செய்ய நமக்கு உடம்பிலும் மனதிலும் தெம்பும் தைரியமும் பிறப்பதோடு வீட்டில் உள்ள தடைகள் எல்லாம் விலகி குலதெய்வத்தின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |