சிவபெருமான் ஏன் சுடுகாட்டில் வசிக்கிறார் தெரியுமா?
சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர்.
சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.
அந்தவகையில், சிவபெருமான் ஏன் சுடுகாட்டின் காவல் இருக்கிறார் என்று தெரியுமா?
ஒருமுறை பார்வதி தேவி சிவபெருமானிடம் நீங்கள் சுடுகாட்டில் தங்குவதற்கான காரணம் என்னவென்று கேட்டார்.
அதற்க்கு சிவன், "எல்லா மனிதர்களும் இறந்த பிறகு வரக்கூடிய ஒரே இடம் சுடுகாடுதான். தான் உயிருடன் இருக்கும்போது கடவுளிடம் வந்து எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு என்றுதான் வேண்டுகிறார்கள்.
அவர்கள் இறந்த பிறகு அவர்களை நினைத்து உறவினர்கள் சிறிது காலமே கவலைப்படுவார்கள். பிறகு அந்த நபரின் சொத்துக்களை தேடிப் போக ஆரம்பித்து விடுவார்கள்.
அப்போதுதான் அந்த ஆன்மா, 'வாழ்நாள் முழுவதும் செல்வத்தை நோக்கி ஓடி வீணடித்துவிட்டோம். மோட்சத்துக்கான புண்ணிய பலனை சேர்த்து வைக்காமலேயே விட்டுவிட்டோம்' என்று கலங்கி தனியாக நிற்கும்.
ஆனால், நான் அந்த ஆன்மாவை தனியாக விடமாட்டேன். மயான பூமியிலே அந்த ஆன்மாவிற்கு துணையாக இருப்பேன்.
நீ தனியாக இல்லை என்று ஆறுதல் தருவதற்காகவும், அந்த ஆன்மாவிற்கு முக்தி தருவதற்காகவும்தான் நான் ருத்ர பூமியில் இருக்கிறேன்.
இந்த ஜகத்தில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிக்கும் நானே தந்தையாக இருக்கிறேன். எனவே காயம் அடைந்து வலியால் துடிக்கும் குழந்தைக்கு என்னை அடைய உதவுவது எனது கடமையாகும்.
அதனால்தான் நான் ருத்ரபூமியிலே தங்கி அங்கே தவிக்கும் ஆன்மாக்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறேன்" என்று சிவபெருமான் கூறினார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |