முருக பக்தர்களுக்கு ஏன் செவ்வாய் கிழமையில் பிரச்சனைகள் வருகிறது
கலியுகத்தில் நமக்கு ஒரே நம்பிக்கை இறைவன் மட்டுமே. அப்படியாக, கலியுக வரதன் என்று போற்றப்படும் முருகப்பெருமான் உண்மையில் மக்களின் துயர் துடைப்பவர் தான். நாம் அவரை விட்டு விலகினாலும், அவரின் பார்வை நம்மை விட்டு விலகுவதில்லை.
மேலும், முருக பக்தர்களுக்கு முருகப்பெருமானை வழிபாடு செய்ய தொடங்கிய காலத்தில் இருந்தே அவர்கள் வாழ்கையில் நடக்கும் மாற்றங்களை காண முடியும். அதாவது, முருகப்பெருமான் முதலில் நம்முடைய கர்ம வினைகளை அழிக்கிறார்.
நம் மீது ஒட்டி கொண்டு இருக்கும், பாவத்தை கழித்த பிறகே நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறார். அதாவது மனம் தெளிவு அடைந்தால் மட்டுமே, வரும் மகிழ்ச்சியை உணர முடியும். இல்லை என்றால் துன்பத்தை தான் பெரிதாக தாங்கி பிடித்து கொண்டு நிற்கும்.
அதோடு, முருக பக்தர்கள் பலரும் அவர்கள் சில முருகர் ஆலயம் சென்று வர, அவர்களுக்கு தொடர் பிரச்சனைகள் சந்திக்கும் நிலை காண முடிகிறது. அதோடு, இன்னும் ஒரு சில முருக பக்தர்களுக்கு செவ்வாய் கிழமையில் வம்பு வழக்குகள், மன உளைச்சல் ஏற்படும்.
அவ்வாறு ஏற்பட காரணம் என்ன? முருகர் தம்மிடம் என்ன சொல்ல முயல்கிறார். மேலும், சிலருக்கு திருமணத்தில் தோஷம் இருக்கும்.
அவர்கள் திருமண தோஷம் விலக என்ன செய்ய வேண்டும் என்று நம்முடன் முருகப்பெருமானின் அதிசயங்களையும், வழிபாடு முறையும் பற்றி பகிர்ந்து கொள்கிறார் முருகனின் தீவிர பக்தரான ஜெயம் ஸ் கே கோபி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |