முருக பக்தர்களுக்கு ஏன் அதிக அளவில் சோதனை வருகிறது தெரியுமா?
இங்கு பலரும் ஏதேனும் துன்பம் வருகின்ற பொழுதுதான் இறைவனை பற்றிக் கொள்கிறார்கள். இருப்பினும் எவர் ஒருவர் எந்த ஒரு வேண்டுதல் இல்லாமல் இறைவன் மட்டுமே என்கின்ற பக்தியில் முழு நேரமும் அவரை வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் அதிக அளவில் துன்பம் வருகிறது.
அதனால் பலரும் இறைவனை வழிபாடு செய்தால் நமக்கு அதிக அளவில் சோதனைகள் மட்டுமே வரும் என்று எண்ணுவது உண்டு. அப்படியாக இறைவனை வழிபாடு செய்தால் நமக்கு சோதனைகள் அதிகம் வருமா? இறைவன் நம்மை கைவிட்டு விடுவாரா என்பதை பற்றி பார்ப்போம்.
இந்த பூமியில் கலியுக வரதனாக போற்றக்கூடிய முருகப்பெருமானிடம் மனம் உருகி வேண்டுதல் வைத்த நொடியில் நமக்கு அவர் அருள் புரிகிறார். இதை நிச்சயமாக முருகப்பெருமானை வழிபாடு செய்யக்கூடிய பக்தர்கள் அனைவரும் உணர்ந்து இருப்பார்கள்.
அப்படியாக, பலருக்கும் நான் திருப்புகழ் பாராயணம் செய்கின்றேன், திருமந்திரம் பாராயணம் செய்கின்றேன், முருகப்பெருமானுடைய நாமத்தை தினமும் உச்சரித்து அவனை வழிபாடு செய்கின்றேன். ஆனால் துன்ப கடல் என்னை விட்டு அகலவில்லை என்று அவர்கள் கண்ணீர் சிந்துவதுண்டு.

இங்குதான் அந்த பக்தர்கள் ஒரு உண்மையை உணர வேண்டும். இன்று நடக்கக்கூடிய துன்பத்திலிருந்து காப்பாற்றுபவர் முருகன். நீங்கள் அன்று பாராயணம் செய்த திருப்புகழும், திருமந்திரங்களும்உங்களுக்கு கை கொடுக்கவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால், உண்மையில் இன்று உயிர் வாழக் கூடிய பாக்கியத்தை முருகன் மந்திரம் தான் கொடுத்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல் நாம் வாழ்க்கையில் ஒரு முறை திருமந்திரத்தையும் திருப்புகழையும் பாராயணம் செய்துவிட்டால் அதற்கான பலனை கட்டாயம் ஒரு நாள் பெற்று விடுவோம் என்பதில் எந்த ஒரு குழப்பமும் வேண்டாம்.
அப்படியாக, முருகப்பெருமான் பற்றிய அதிசயங்களையும் அவருடைய சிறப்புகளை பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஆன்மீக பேச்சாளர் ரா. விஜயகுமார் அவர்கள். அதைப் பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |