நம்மை முன்னேற விடாமல் கீழே தள்ளும் சாபம்.. இந்த சாபம் மட்டும் வாங்கவே கூடாதாம்

By Sakthi Raj Apr 04, 2026 11:25 AM GMT
Report

இந்த உலகத்தில் மோசமான ஒன்றில் சாபமும் ஒன்று. அதாவது நாம் ஒருவரை காயப்படுத்துகின்ற பொழுது அந்த நபர் வலி தாங்காமல் நமக்கு விடக்கூடிய சாபம் நம்மை பல்வேறு பிறவிகள் வரை பாதிக்கிறது. அந்த வகையில் சாபங்கள் பல்வேறு வகைகளாக இருப்பதாக சாஸ்திரங்கள் சொல்கிறது.

அதில் குறிப்பாக 13 வகையான சாபங்கள் ஒரு மனிதனை மிகப்பெரிய அளவில் துன்பத்திற்கு ஆளாக கூடும் என்று நம்பப்படுகிறது. இந்த சாபம் ஒருவர் பெற்று விட்டால் அடுத்தடுத்து சந்ததியினரையும் இந்த சாபமானது தொடரும் என்றும் நம் வாழ்க்கையில் முன்னேறவே விடாமல் தடுக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

நம்மை முன்னேற விடாமல் கீழே தள்ளும் சாபம்.. இந்த சாபம் மட்டும் வாங்கவே கூடாதாம் | Why One Shouldnt Get Women Curse In Life

2026: மகர ராசியினருக்கு ஏப்ரல் மாதம் எப்படி இருக்க போகிறது?

2026: மகர ராசியினருக்கு ஏப்ரல் மாதம் எப்படி இருக்க போகிறது?

அப்படியாக 13 சாபங்களில் மிகவும் முக்கியமான சாபம் தான் பெண் சாபம். ஒரு பெண்ணினுடைய சாபம் எந்த ஒரு மனிதன் பெற்றுவிட்டாலும் அதை அவனுடைய சந்ததியினர் அனைவரும் அனுபவிக்க வேண்டிய நிலையை இது கொடுத்து விடுகிறது.

பெண்கள் வழியாகத்தான் பூமிக்கு ஒவ்வொரு உயிரினமும் வருகிறது. இறைவனும் "சிவன் இல்லாமல் சக்திகளை சக்தியில்லாமல் சிவன் இல்லை" பெண்ணின் மகிமையை உணர்த்துகிறார். இவ்வளவு அற்புதம் நிறைந்த பெண்ணினுடைய சாபம் ஒருவர் பெற்று விட்டால் அது அவர்கள் வம்சத்தையே நாசம் செய்யும் அளவிற்கு மிகப்பெரிய தாக்கத்தை உண்டு செய்யும்.

அதாவது பெண்ணிற்கு செய்யக்கூடிய துரோகம், கொடுமை, பெண்களை ஏமாற்றுவது, இழிவு படுத்துவது போன்ற விஷயங்களால் பாதிக்கப்பட்ட பெண் உண்மையிலே வலி பொறுக்காமல் துரோகத்தின் உச்ச நிலையில் வயிறு எரிந்து சாபம் கொடுத்தால் அந்த சாபம் பலிக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும், ஒருவருடைய ஜாதகத்தில் 6, 8, 12 ஆகிய இடங்களில் சந்திரன் நீசம் பெற்று இருந்தாலும் அல்லது மறை உற்று இருந்தாலும் அவர்களுக்கு பெண் சாபம் இருப்பதை உணர்த்துகிறது. அதனால் இவர்களுக்கு இப்பிறவியில் மிகப்பெரிய அளவில் அவமானங்களையும் வாழ்க்கையில் முன்னேறவே விடாத ஒரு நிலையையும் பெற்றுக் கொடுக்கும்.

நம்மை முன்னேற விடாமல் கீழே தள்ளும் சாபம்.. இந்த சாபம் மட்டும் வாங்கவே கூடாதாம் | Why One Shouldnt Get Women Curse In Life

ஆன்மீகம்: வீடுகளில் தவறியும் செய்யக்கூடாத முக்கியமான 14 விஷயங்கள்

ஆன்மீகம்: வீடுகளில் தவறியும் செய்யக்கூடாத முக்கியமான 14 விஷயங்கள்

இந்த பெண் சாபம் ஆனது அவர்களுக்கு பிறக்கக்கூடிய பிள்ளைகள் வரை பாதிக்கப்கூடும்என்று சொல்லப்படுகிறது. அப்படியாக பல நேரங்களில் ஒருவரை அறியாமல் தான் பாவங்கள் செய்யப்படுகிறது.

அப்படியாக அறியாமல் செய்த பாவத்தினால் ஒருவர் பெண் சாபம் அடைந்து விட்டால் அவர்கள் பட்டுக்கோட்டையில் அருகில் இருக்கக்கூடிய அத்திக்கோட்டை எனும் ஊரில் சப்த கன்னி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

இங்கு சென்று வழிபாடு செய்வதால் பெண் சாபம் நீங்குவதாக நம்பிக்கை. மேலும் ஏழு வயதிற்கு குறைவாக இருக்கக்கூடிய பெண் குழந்தைகளுக்கு வஸ்திர தானம் செய்து வந்தாலும் பெண்களுடைய சாபம் நீங்கும் என்பது ஐதீகம். எனவே ஏழை சிறுமிகளுக்கு வஸ்திரதானம் செய்து வாருங்கள்.

வீடுகளில் அருகில் இருக்கக்கூடிய சப்த கன்னிகளுக்கு சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்தாலும் சாபமானது நீங்கும். சப்த கன்னிமார்களுக்கு பாவாடை வாங்கி கொடுத்து அதனை சாற்றி வழிபாடு செய்தால் பெண் சாபம் நீங்குவதாக ஜோதிடர்கள் சொல்கிறார்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US