பங்குனி அமாவாசை அன்று நடக்கும் 7 ஆன்மீக அதிசய நிகழ்வுகள்

By Sakthi Raj Mar 17, 2026 08:20 AM GMT
Report

அமாவாசை நாட்களில் பங்குனி அமாவாசை மிகவும் விசேஷம் மற்றும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் பங்குனி அமாவாசை இரவு நேரங்களில் ஆன்மீக அலைகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் ஆகமங்கள் மற்றும் சித்தர் குறிப்புகள் நமக்கு சொல்கின்றது. அந்த வகையில் அன்று இரவு நடக்கக்கூடிய ஏழு ஆன்மீக அதிசய நிகழ்வுகளை பற்றி பார்ப்போம்.

1. அமாவாசை இரவில் முன்னோர்கள் சக்தி பூமிக்கு மிகவும் அருகில் இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதனால் அன்றைய நாளில் தர்ப்பணம், தானம், தீபம் ஏற்றி வழிபாடு செய்வது நமக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை செய்கின்றது என்று சொல்கிறார்கள்.

2. ஒரு சிலருக்கு பங்குனி அமாவாசை இரவு நேரங்களில் வித்தியாசமான கனவுகளும் முன் ஜென்ம நினைவுகள் மற்றும் முன்னோர் தொடர்பான கனவுகள் வருவதை நாம் காணலாம்.

பங்குனி அமாவாசை அன்று நடக்கும் 7 ஆன்மீக அதிசய நிகழ்வுகள் | Why Panguni Amavasai Is Important Day In Spiritual

வாஸ்து : பலி வாங்கிய மனை.. சென்னையில் நடந்த உண்மை சம்பவம்

வாஸ்து : பலி வாங்கிய மனை.. சென்னையில் நடந்த உண்மை சம்பவம்

3. மேலும், பங்குனி அமாவாசை நாளில் வீடுகளில் இரவு 12 முதல் 3 மணிக்குள் அதாவது பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்பாக வீடுகளில் வளர்க்கக்கூடிய செல்ல பிராணிகள் வித்தியாசமாக நடந்து கொள்வதை நாம் பார்க்க முடியும்.

4. இந்த பங்குனி அமாவாசை ஆனது நம்முடைய கர்ம வினைகளை போக்கக்கூடியதாக கருதப்படுவதால் அன்றைய இரவு நாம் செய்ய கூடிய மந்திரம் ஜெபம் தியானம் இவை அனைத்தும் பத்து மடங்கு பலனை நமக்கு தரக்கூடியதாக சித்தர்கள் சொல்கிறார்கள்.

சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: நிதிநிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்!

சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: நிதிநிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்!

5. ஒரு சிலருக்கு திடீரென்று ஆன்மீக உணர்வு மேம்படும். அமாவாசை இரவு சிலருக்கு ஆழ்ந்த தியான அனுபவங்கள் பெறுவதை நாம் பார்க்கலாம். 6. பங்குனி அமாவாசை நாளில் நம் கனவில் முன்னோர்கள் வருவது மிகப்பெரிய அளவில் நன்மையின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

7. சித்தர்கள் பங்குனி அமாவாசையை "கர்ம வாயில் திறக்கும்' நாள் என்று குறிப்பிடுகின்றனர். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US