இந்த ஒரு முறையில் வழிபாடு செய்தால் நம் தலையெழுத்தே மாறுமாம்
கோவிலில் இறை வழிபாடு செய்வதற்கு என்று சரியான முறை இருக்கிறது. அதாவது வழிபாடு செய்ய தொடங்கியதில் இருந்து இறைவழிபாட்டை நிறைவு செய்யும் வரை நாம் சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் அதில் முக்கியமான ஒன்றுதான் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வழிபாடு செய்வது.
இவ்வாறு ஒருவர் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வழிபாடு செய்யும் பொழுது அவர்களுடைய தலையெழுத்தே மாறும் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம். கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்யும் பொழுது சாஷ்டாங்கமாக விழுந்து வழிபாடு செய்வதற்கு என்று குறிப்பிட்ட சில இடங்கள் இருக்கும்.

அங்கு நாம் இறைவழிபாடு முடித்த பிறகு சாஷ்டாங்கமாக விழுந்து வழிபாடு செய்யும் பொழுது நிச்சயம் நம் தலையெழுத்தே மாறும். அதாவது, தரையிலே கால் படாத இறைவனின் திருவடிகளை நினைத்து தரையில் விழுந்து சாஷ்டாங்கமாக வழிபடும் பொழுது இறைவன் நாம் நினைத்ததை நிறைவேற்றிக் கொடுப்பதாக ஐதீகம்.
அதனால் தான் எப்பொழுதுமே இறைவனுடைய பரிபூரண அருளை பெறுவதற்கு தரையில் விழுந்து சாஷ்டாங்கமாக வழிபாடு செய்கின்றோம். இந்த கருத்துக்களை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியார் பாடலில் மிக அருமையாக சொல்லப்பட்டிருக்கிறது.
பாடல்:
வானிடு வில்லின் வரவறியா வாய்மையால்
கானிலம் தோயாக் கடவுளை – யானிலம்
சென்னியுற வணங்கிச் சேர்துமெம் உள்ளத்து
முன்னியவை முடிக என்று

அதாவது கோவிலுக்கு செல்லும் பொழுது எவ்வாறு நமக்கு வேண்டியதை இறைவனிடம் கேட்டு வழிபாடு செய்கின்றோமோ, அதே போல் நாம் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு செய்கின்ற தவறையும் மன்னித்து வேண்டி சாஷ்டாங்கமாக விழுந்து அவனை வழிபாடு செய்யவேண்டும்.
அதாவது இந்த உலகத்தில் நம்மிடமிருந்து எதையும் இந்த பிரபஞ்சமானது எந்த வேளையிலும் எடுத்துக் கொள்ளக்கூடும். எதுவும் இங்கு நிரந்தரம் இல்லை.
ஆதலால் கர்வம், அகங்காரம் என்று எந்த ஒரு நிலையும் இல்லாமல் இறைவனை நீயே கதி! என்றும் இந்த மானிட பிறவியை நான் சரியாக வாழ்ந்து உன்னை வந்து சரண் அடைய வேண்டும் என்று சாஷ்டாங்கமாக உணர்ந்து நாம் வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய நேரமே சரியில்லாமல் இருந்தாலும் நிச்சயம் இறைவன் அருளால் அது மாற்றி அமைக்கப்படும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |